scorecardresearch

ஜிம் தேவையில்லை! தொப்பை கொழுப்பு குறைக்க தினமும் இதை மட்டும் பண்ணுங்க

Excerpt: weight gain, weight loss, belly loss- உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வது வலிமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

ஜிம் தேவையில்லை! தொப்பை கொழுப்பு குறைக்க தினமும் இதை மட்டும் பண்ணுங்க
belly fat

Weight Loss Tips Tasty Foods For Lose Belly Fat And Weight | எடை இழப்பு குறிப்புகள் தொப்பை கொழுப்பு மற்றும் எடை இழக்க சுவையான உணவுகள்- எடை இழப்பு என்று வரும்போது, மக்கள் பெரும்பாலும் தொப்பையை குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். தட்டையான வயிறு என்பது பலருக்கு ஒரு ஃபிட்னெஸ் கோல் ஆகும். ஆனால் அதை அடைய எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது.

உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வது வலிமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. வழக்கமான உடற்பயிற்சி, கூடுதலாக, அடிவயிற்றை உறுதிப்படுத்தவும், தசை வலிமையை உருவாக்கவும் உதவுகிறது.

பிடிவாதமான தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் எளிய யோகா இங்கே உள்ளது. தொப்பை உள்ளவர்கள் அனைவரும் இந்தப் பயிற்சியை செய்யலாம்

எப்படி செய்வது?

*வீடியோவில் காட்டியபடி, இரண்டு கால்களையும் 90 டிகிரியில் வைக்கவும்

*இடது கால் 90 டிகிரி, வலது கால் 60 டிகிரி

*வலது கால் 60 டிகிரி, இடது கால் 90 டிகிரி

*இப்போது இரண்டு கால்களையும் 60 டிகிரியில் வைக்கவும்

எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?

முழு செட்டுக்கு மூன்று-நான்கு சுற்றுகள்.

பலன்கள்

*இது அடிவயிற்று பகுதி, முதுகு தண்டை வலுப்படுத்த உதவுகிறது

* கால்களை வலுப்படுத்துகிறது

* பிரசவத்திற்கு பிறகு செய்ய ஏற்றது (சிசேரியனுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு அல்லது மருத்துவர் பரிந்துரைபடி)

*பின்பக்க கழுத்து வலி பிரச்சினைகளின் போதும் செய்யலாம்

“பிரசவத்திற்குப் பிந்தைய தொப்பை கொழுப்பின் விஷயத்தில் – முக்கிய தசைகளை வலுப்படுத்துவதற்கு இது நிறைய செய்ய வேண்டும்.

ச்சரிக்கை

*வயிற்று அறுவை சிகிச்சை அல்லது பிரசவம்/சிசேரியன் செய்த உடனேயே தவிர்க்கவும்

*சிசேரியனுக்கு பிறகு ஆறு மாதங்கள் வரை அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் வரை, பயிற்சி செய்யக்கூடாது.

*கீழ் முதுகு வலி ஏற்பட்டால் தவிர்க்கவும்

இதுத்தவிர நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது சத்தான காலை உணவை சாப்பிடுவது மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் – குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் – நிறைந்தது. இதில் பீட்டா-குளுக்கன் உள்ளது, இது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

ரெசிபி

ஒரு கிண்ணத்தில், 1 கப் சமைத்த ஓட்மீல் உடன், அரை கப் பெர்ரி அல்லது ஏதேனும் பழங்கள், 1 டீஸ்பூன் ஆளி விதைகள் மற்றும் ஒரு கைப்பிடி பாதாம் சேர்த்து அப்படியே சாப்பிடவும். இது ஆற்றல் நிறைந்த அதிக நார்ச்சத்து கொண்ட காலை உணவு.

முட்டை

தசை திசுக்களை உருவாக்க தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் முட்டையில் உள்ளன.

ரெசிபி

குறைந்த எண்ணெயில் ஒரு ஆம்லெட் தயாரிக்கவும், கூடுதல் ஊட்டச்சத்துக்காக அதில் நறுக்கிய காய்கறிகளைச் சேர்க்கலாம், முழு தானிய பிரெட் உடன் இதை சாப்பிடலாம். இந்த புரதம் நிறைந்த காலை உணவு வலுவான தசைகள் மற்றும் எலும்புகளை உருவாக்க குறிப்பாக சிறந்தது.

உளுந்து

உளுந்து’ நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள், குறிப்பாக பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது மூட்டுகளில் வீக்கம் மற்றும் தசை வலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது, நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

ரெசிபி

ஓட்ஸ் மற்றும் உளுத்தம் பருப்பை ஊறவைத்து மாவு செய்து, நெய் தடவிய இட்லி அச்சுகளில் நிரப்பவும். 5-10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Weight loss tips in tamil exercises to reduce belly fat