/tamil-ie/media/media_files/uploads/2019/08/weight-loss-ginger-lemon-1.jpg)
weight loss exercise, weight loss diet plan, weight loss foods, எடை குறைக்க, weight loss reasons
Weight Loss Tips In Tamil: சரிபாதி நபர்களுக்கு பிரச்னை உடல் எடைதான். இதற்காக மருந்து, மாத்திரைகள், ஆபரேஷன் என களம் இறங்கி விடுபவர்கள் உண்டு. அதெல்லாம் அவசியமில்லை, அன்றாடம் வீட்டில் கிடைக்கும் எளிமையான உணவுப் பொருட்களைக் கொண்டே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முடியும் என்கிறார்கள், உணவுத்துறை வல்லுனர்கள்.
அப்படி பலராலும் பரிந்துரைக்கப்படும் எளிய ஒரு உணவு வகை பற்றி இங்கு பார்க்கலாம். அது, இஞ்சி-எலுமிச்சை-தேன் கலவைதான். இதை எப்படி தயாரிப்பது?
Stomach Weight Loss Tips In Tamil: தொப்பை குறைய எலுமிச்சை, இஞ்சி
1. ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து, அதைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். போதுமான அளவுக்கு இஞ்சி எடுத்துக் கொண்டு அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.
2. இன்னொருபுறம் 3 டம்ளர் அளவுக்கு தண்ணீரை கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரில் மசித்த இஞ்சியை 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3. பின்னர் இஞ்சி கரைசலை வடித்து, இஞ்சி துகள்களை அகற்றவும். துகள்கள் அகற்றப்பட்ட இஞ்சி கரைசலுடன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
4. குடிக்கப் போதுமான அளவு குளிர வைக்கவும். தேவையைப் பொறுத்து தேன் சேர்த்துக் கொள்ளவும். தேன் கட்டாயம் அல்ல.
5. பிரிட்ஜில் வைத்தும் இந்த இஞ்சி-லெமன்-தேன் கலவையை பயன்படுத்தலாம். ஒரு நாளில் 3 வேளை எடுத்துக் கொள்வது நலம்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால்ஸ், ஷாகால்ஸ் ஆகியன செரிமானத்தை அதிகப்படுத்தக் கூடியவை. இது உடல் எடை குறைவுக்கு வெகுவாக உதவும். அதேபோல எலுமிச்சையில் விட்டமின் சி மட்டுமன்றி, கலோரியை எரிக்கக்கூடிய தன்மையும் இருக்கிறது. இவை இரண்டும் இணைந்து, எடைக் குறைப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.