weight loss, weight loss tips, weight loss foods, weight loss diet, weight loss tips in tamil, weight loss drink, தொப்பை குறைய உணவு முறைகள்
Weight Loss Tips In Tamil: அளவான உணவை 6 முறையாகப் பிரித்து சாப்பிட்டால் வளர்ச்சிதை மாற்றம் அதிக கலோரிகளை எரிக்கும். இது உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடை குறைப்புக்கான எளிய டிப்ஸ் இது. இதில் ஆபத்து எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisment
எடை அதிகமாவது, உலகளாவிய பிரச்னையாக இருக்கிறது. எனவே எடை குறைப்புக்கான ஆலோசனைகளை பலரும் நாடியபடி இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நாம் சாப்பிடும் உணவை, அளவாக 6 நேரங்களாக சாப்பிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
Weight Loss Diet Plan: உடல் எடை குறைய டிப்ஸ்
உடல் எடையை குறைப்பது என்பது அவர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் தேவைகளைப் பொருத்தது என்கிறது ஆய்வு. ஒருவர் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்பவராக இருந்தால் அவரால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட முடியுமா? ஆக எத்தனை முறை சாப்பிட வேண்டும் என்ற திட்டம் வெறும் திட்டம் மட்டுமல்ல. அதை பின்பற்றக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்க வேண்டும்.
Advertisment
Advertisements
அதேபோல் உங்கள் உடலில் உள்ள சக்தி வெளியேறுவதைப் பொருத்தே உண்ணும் உணவும் செரிமானமடையும். உடல் எடையும் குறையும். ஆக உங்களுக்கு பசிக்கும்போது மட்டுமே உணவு உண்ண வேண்டும். டயட் திட்டம் சொல்வதை எல்லாம் பின்பற்றக்கூடாது. உங்கள் உடல் எதை எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
அப்போதுதான் உடல் எடைக் குறையும். பசி இல்லாதபோது சாப்பிட்டால் அந்த உணவு செரிமானமடைந்து கொழுப்பாக உடலில் தங்கிவிடும். அதுதான் உடல் எடை அதிகரிக்க காரணம் என்கிறது ஆய்வு. ஆனவே பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
அதேபோல் உணவின் அளவை விட என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதே முக்கியம். ஆரோக்கியமான, உடல் ஏற்றுக்கொள்ளக் கூடிய உணவை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். எனவே ஒரு நாளைக்கு பசி எடுக்கும் போது மட்டும் 6 முறையும் சாப்பிடலாம். அல்லது நான்கு முறையும் சாப்பிடலாம் என்கிறது ஆய்வு.