Weight loss Tips In Tamil: நமது அன்றாட உணவில் பூசணி விதைகளை ஏன் சேர்க்க வேண்டும் என்ற காரணங்களை இங்கே காணலாம். உயிரணு பராமரிப்பைத் தவிர, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும், உடல் பருமனைத் தடுப்பதற்கும் பயன்படுகின்றன.
மூளைக்கும், இதயத்துக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் பூசணி விதைகளில் அதிகமாக உள்ளது. இந்த கொழுப்பு நமது உடம்புக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. எனினும், இந்த ஒமேகா -3 கொழுப்பை நமது உடல் தானாக தயாரிக்க முடியாது என்பதால், பூசணி விதைகள் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
உயிரணு பராமரிப்பைத் தவிர, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும், உடல் பருமனைத் தடுப்பதற்கும் பயன்படுகின்றன.
போதுமான நார்ச்சத்து வழங்குகிறது:
பூசணி விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகின்றன. “வெறும் 100 கிராம் பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் ஒருவருக்கு 18 கிராம் நார்ச்சத்து கிடைக்கின்றன. அதாவது, சராசரி மனிதனின் அன்றாட தேவையில் இது 72 சதவீதமாகும் ” என்று கியா (Gaia) நிறுவனரும், இயக்குனருமான டோலி குமார் தெரிவித்தார்.
மேலும் ,“ நன்மை மற்றும் தீமையை விளைவிக்கும் 100 டிரில்லியன் குடல் பாக்டீரியாக்கள் மனித பெருங்குடலில் உள்ளன. நார்ச்சத்து நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவை வழங்குகிறது. நமது குடலில் நுண்ணுயிர் சமநிலையை பராமரிக்க நார்சத்து முக்கிய பங்கு வகிப்பதுடன் செரிமானத்திற்கு உதவுகிறது. இது நாள்பட்ட நோய்களையும் தடுக்க உதவுகிறது”என்றும் தெரிவித்தார்.
கொழுப்பை ஒழுங்குபடுத்துகிறது
நல்ல கொழுப்பு (அ) அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (ஹெச்.டி.எல். (HDL) மற்றும் கெட்ட கொழுப்பு (அ) குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (எல்.டி.எல்) ஆகிய இரண்டு வகை கொழுப்பு புரதங்களை நமது கல்லீரல் உற்பத்தி செய்கிறது.
“எல்.டி.எல் இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை உருவாக்கி, மாரடைப்பை அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் நல்ல கொழுப்பு (எச்.டி.எல்) இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கரைத்துவிடுகிறது. இதயத் தமனியைக் கொழுப்பு அடைப்பதைத் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாக்குகிறது. உடலில் கெட்ட கொழுப்பை குறைக்கவும், நல்ல கொழுப்பை பராமரிக்கவும் பூசணி விதைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை:
பூசணி விதைகளில் PUFA, லிபோபிலிக் போன்ற உள்ளடக்கம் இருப்பதால் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் தேவையற்ற கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் செல் புரதங்கள், DNA, போன்றவைகளை ஆக்சிடேஷன் என்று அழைக்கப்படும் செயல்முறையின் மூலம் உடலைப் பாதிக்கின்றன.”என்று டோலி குமார் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil