உடல் எடையை குறைக்க எளிமையான 6 வழிகள் உங்களுக்காக இதோ!

அது உங்களின் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும்.

weight loss tips to reduce belly fat : உடல் எடையை குறைக்க நீங்கள் இதை பின்பற்றலாம். சிலருக்கு கொஞ்சமாக உடல் எடை கூடினாலும் கூட மன அழுத்தம் வந்துவிடும். அல்லது மன அழுத்தம் வருவதால் உடல் எடை கூடும் அபாயம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைத்தால் போதும் என்று தினமும் வேர்க்க வியர்க்க உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களா நீங்கள். உங்களுக்காக தான் இந்த கட்டுரை.

ஏழு மணி நேரம் தூக்கம்

மனஅழுத்தம் உடல் எடையுடன் தொடர்பு கொண்டது. ஒரு நாளைக்கு ஒருவர் 7 மணி நேரம் தூங்கும் போது மன அழுத்தம் குறைய துவங்குகிறது. ஆரோக்கியமான மாற்றங்கள் உங்களுக்கு தெரிய வரும். அதனால் உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் நிச்சயம் ஏழு மணி நேரம் தூங்கியே ஆக வேண்டும்,

உணவுக் கட்டுப்பாடு

இது தூக்கத்தை  விடவும் மிக முக்கியமானது.  உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன உணவு உண்கிறீர்கள் என்பதில் எப்போதும் கவனம் கொள்ளுங்கள். குறைந்த கலோரிகள் கொண்டிருக்கும் உணவுகளை நன்றாக மென்று உண்ணுங்கள். அதே போன்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

இரவு உணவை தாமதமாக உண்ணாதீர்கள்

ஏழு அல்லது 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் கலோரியை எரிக்க போதுமான நேரம் உங்கள் உடலுக்கு கிடைக்கும். உணவு உண்டவுடன் அப்படியே உறங்கிவிட்டால் அது கஷ்டம் தான். கார்போ ஹைட்ரேட் உணவுகளை இரவில் தவிர்த்துவிடுங்கள்.

வேலை பார்த்துக் கொண்டே உண்ணாதீர்கள்

வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று வேலையில் ஒரு கண் உணவில் ஒரு கண் என்று இருக்க வேண்டாம். கொஞ்சம் நேரம் எடுத்து உங்களின் உணவை உட்கொள்ளுங்கள். வேலை பார்த்துக் கொண்டே உண்டால் அளவுக்கு அதிகமான உணவை நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.

உணவை தவிர்க்காதீர்கள்

பலர் உடல் எடையை குறைக்க உணவு உண்ணாமல் இருந்தால் சரி ஆகிவிடும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நீங்கள் உணவை உண்ணாமல் விட்டாமல் அதிகமாக உணவை அடுத்தடுத்த வேலைகளில் உட்கொள்ள நேரிடும்.

படியேறுங்கள்

உங்களால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய இயலவில்லை என்றால் நீங்கள் தாரலமாக படிகளில் ஏறி இறங்கலாம். எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் நடந்து செல்லுங்கள். அது உங்களின் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close