பொன்னாங்கண்ணி கீரையை உண்டால் உடலே பொன்நிறமாக மாறும் என்பது சித்தர்கள் வாக்கு. பொன்னாங்கன்னி கீரையில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் வளமான அளவில் உள்ளது.பொன்னாங்கன்னி கீரை ஆரோக்கியமான சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும், அழகு மேம்படும்.
பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ, கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவை நீங்கும். மேலும் பொன்னாங்கன்னி கீரையை வாரம் இரணடு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது.
அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இக்கீரையை சூப்பாக அருந்தினால் குணப்படுத்தும், தாய்மார்களுக்கு நன்கு பல்சுரக்கச் செய்யும். குடலில் ஏற்படும் இரணங்களை விரைந்து ஆற்றும், கல்லீரலை நன்கு பலப்படுத்தி காமாலை போன்ற தொற்றுக்களை வராமல் பாதுகாக்கும். மேலும் நோய் எதிர்ப்பு திறனை நம் உடலுக்கு அதிகமாக்கிக்கொடுக்கிறது, அதோடு ஜீரண மண்டலத்தை உடலில் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
குடல் தொற்று மற்றும் புழுக்களை வெளியேற்றும், ஆண்களுக்கு ஏற்படும் விந்து ஒழகுதலை சரி செய்யும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
பொன்னாங்கன்னி இலையில் சாறு எடுத்து தலைமுடியில் தேய்து குளித்து வருவதால், முடி வளர்ச்சிக்கு உதவும் என்கிறார் மருத்துவர் சந்தோஷிமா. இத தவிர இந்த கீரையை சாப்பிட்டு வந்தாலும் முடிவளர்ச்சிக்கு உதவும். மண்ணீரல் நோய், மூலநோய் உள்ளவர்கள் பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து, சாப்பிடுவதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்கிறார் மருத்துவர் சந்தோஷிமா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.