தாய்ப்பால் கொடுக்கும் அனுபவத்தின் போது சில சமயங்களில், உங்கள் மார்பக பால் மற்ற நிறங்களிலும் இருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாதவிடாய் முதல் பிரசவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பது வரை, ஒரு பெண்ணின் உடல் நிறைய மாற்றங்களுக்கு உட்படுகிறது, இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும். இருப்பினும், நீங்கள் ஏதேனும் அசெளகரியத்தை அனுபவித்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
பிரசவத்திற்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு, தனது தாய் பால் எப்படி இளஞ்சிவப்பு நிறமாக மாறியது என்பதை சமீபத்தில் டிக்டாக் வீடியோவில் பகிர்ந்த ஒரு புதிய தாயின் விஷயமும் அப்படித்தான். எனக்கு குழந்தை பிறந்த போக்கும் போது , நான் தாய்ப்பால் கொடுப்பதைத் தேர்ந்தெடுத்தால், என் பால் பல வண்ணங்களில் வரும் என்று யாரும் என்னிடம் கூறவில்லை என அவர் பகிர்ந்த வீடியோ 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மேலும் புரிந்துகொள்ள நாங்கள் நிபுணர்களை அணுகினோம். அவர்கள் கூறியது இதோ!
தாய்ப்பால் பொதுவாக மஞ்சள், வெள்ளை, கிரீம், பழுப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும். இருப்பினும் ஏதாவதொரு சமயத்தில் தாய்ப்பால் மற்ற நிறங்களிலும் இருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம். வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் அடிப்படையில் தாய்ப்பால் நிறம் மாறலாம்.
பீட்ரூட் அல்லது ஆரஞ்சு பழ பானங்கள் போன்ற இயற்கை உணவுகளை உட்கொண்ட பிறகு தாய்ப்பால் மை, ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாக மாறக்கூடும் என மும்பை பாட்டியா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் வினித் சம்தானி கூறுகிறார்.
தேசிய உயிர்தொழில்நுட்பவியல் மையத்தின் தகவலின்படி, பல நோய்கள் மற்றும் மரணத்துக்கு வழிவகுக்கும் செரட்டியா மார்செசன்ஸ் (Serratia marcescens) பாக்டீரியத்தின் அணிவகுப்பும் தாய் பால் இளஞ்சிவப்பு நிறமாக காரணம் என தெரிவிக்கிறது.
இதுகுறித்து மூத்த மகளிர் மருத்துவ ஆலோசகர் ரித்து சேதி கூறுகையில், தாய்ப்பாலில் உள்ள இரத்தத்தை சீக்கிரம் பரிசோதிக்க வேண்டும். மார்பக தொற்று காரணமாக இது நேரலாம். சமயங்களில் மார்பகத்திலிருந்து முந்தைய இரத்தம் தோய்ந்த வெளியேற்றத்தை நோயாளி கவனிக்காமல் இருக்கலாம். மேலும் பால் குழாய்களின் அடிப்படை புற்றுநோயாகவும் இது இருக்கக்கூடும் என அவர் கூறுகிறார்.
அறிகுறிகள் என்ன?
மருத்துவர் சேத்தியின் கூற்றுப்படி,
மார்பகத்தின் எடை
மார்பகத்தில் கட்டி இருப்பதுபோல உணர்வது
உடைந்த முலைக்காம்புகள்
முன்கூட்டியே மார்பகத்திலிருந்து அசாதாரண வெளியேற்றம்
கர்ப்பத்திற்கு முன் அல்லது கர்ப்ப காலத்தில் இந்த நிலைமைகள் ஏதேனும் இருந்தால், நோயாளி தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகத்திலிருந்து இரத்தம் வருவதற்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். எனவே குழந்தைக்கு உணவளிப்பது பாதுகாப்பானதாக இருக்காது. இது சரியான நேரத்தில் கண்டறியப்பட வேண்டிய மார்பகத்தின் அடிப்படை நோயியலைப் பொறுத்தது என மருத்துவர் சேத்தி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil