கருப்பைவாய் புற்றுநோய் பாதிக்கப்பட்டு, பாலிவுட் நடிகை பூனம் பாண்டே உயிரிந்துள்ளார். இவரது மரணத்தை அவரது மேலாளர் உறுதி செய்துள்ளார்.
கருப்பைவாய் புற்று நோய் தற்போது மிகவும் பரவலாக ஏற்படும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் 32 வயதே ஆனா பூனம் பாண்டே இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மகப்பேறு மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனிஷ் மசேவ் கூறுகையில், ” இந்த புற்று நோயால் பாதிக்கப்படும் நபருக்கு, உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சியடையும். முதலில் கருப்பை வாய் பகுதியை தாக்கும்.
தடுப்பூசிகள் மற்றும் முன்பே நோய்யை கண்டுபிடித்தால் இதை குணமாக்க முடியும். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 30 மற்றும் அதற்கு மேலாக உள்ள பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறினார்.
சமீபத்தில் இந்த புற்று நோய் தொடர்பாக அரசிடம் இருந்து கிடைத்த செய்தியில், எச்.பி.வி தடுப்பூசி செலுத்தப்பட்டு, இளம் பெண்கள் இந்த நோய் ஏற்படாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நோய்யின் ஆரம்பப் புள்ளியாக எச்.பி.வி வைரஸ் தாக்குதலை நாம் கூற முடியும். குறிப்பாக உடல் உறவில் ஈடுபடும்போது இந்த வைரஸ் பரவுகிறது. ஆனால் சிறிய அளவில் ஆன நபர்களுக்கு மட்டுமே, இந்த வைரஸ் கருப்பை வாய்ப் புற்று நோயாக மாறுகிறது என்று மருத்துவர் கூறுகிறார்.
இதுபோல மிகவும் சிறு வயதில் திருமணம், அடிக்கடி கர்ப்பமாவது உள்ளிட்ட காரணங்களால் கூட இது ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதுபோலவே சிறுவயதில் உடலுறவில் ஈடுபடுவது, பாதுகாப்பான முறையில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது, புகை மற்றும் குடிப்பழகத்தால் இந்த புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
1 முதல் 3 வருடங்களுக்கு ஒரு முறையாவது, பெண்கள் நமது உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நாம் இதுபோன்ற நோய்களை தடுக்க முடியும்.
கருப்பைவாய்ப் புற்று நோய்யின் அறிகுறிகள்?
· மாதவிடாய் ஏற்பவுவதற்கு முன்பாகவோ அல்லது இடைபட்ட காலங்களில் தொடர்ந்து ரத்த போக்கு இருப்பது. அல்லது லேசான ரத்தம் படிவது. மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு இது நடந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
· மாதவிடாய் நாட்களில் வழக்கத்தை விட அதிக நாட்கள் ரத்த போக்கு தொடர்வது
· பெண் உறுப்பில் இருந்து தண்ணீர் போல, மிகவும் நாற்றம் வீசும் திரவம் வெளியேறுவது.
· உடலுறவின் போது இடுப்பு வலி ஏற்படுவது. சாதாரண நேரத்திலும் இடுப்பு வலி ஏற்படுவது.
· சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது சிறுநீரில் ரத்தம் இருப்பது.
· காரணம் இல்லமால் எடை குறைவது.
· கடும் சோர்வு
· காலில் உள்ள வீக்கம்
· இடுப்பு வலி மற்றும் கால் வலி
· புற்று நோய் முற்றிய நிலையில், சுறுநீர் வெளியாகாமல் கட்டுப்படுத்துவது சிரமமான ஒன்றாகும்.
இந்த நோயிலிருந்து எப்படி நம்மை காத்துக்கொள்வது?
9 முதல் 12 வயது பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி உள்ளது. இதுபோல 26 வயது வரை தடுப்பூசி இருக்கிறது. சரியான கால இடைவேளையில் இதை நாம் செலுத்திகொள்ள வேண்டும்.
பாப் பரிசோதனை, எச்.பி.வி பரிசோதனை ( Pap tests , HPV tests ) நாம் 21 வயது முதலே செய்ய வேண்டும். சில வருடங்களுக்கு ஒரு முறை செய்தால், நாம் இந்த நோய் ஏற்படுவது ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.