இதய துடிப்பு எதனால் எல்லாம் அதிகரிக்கும்? என்ன செய்யணும்? டாக்டர் நித்யா விளக்கம்
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் நித்யா, மூச்சுத் திணறலுக்கான பல்வேறு காரணங்களையும், அதற்கான எளிய சித்த மருத்துவத் தீர்வுகளையும் மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் நித்யா, மூச்சுத் திணறலுக்கான பல்வேறு காரணங்களையும், அதற்கான எளிய சித்த மருத்துவத் தீர்வுகளையும் மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
இதய துடிப்பு எதனால் எல்லாம் அதிகரிக்கும்? என்ன செய்யணும்? டாக்டர் நித்யா விளக்கம்
அண்மைக்காலமாகப் பலருக்கும் மூச்சு வாங்குதல், நடக்கும்போது அல்லது மாடிப்படி ஏறும்போது ஏற்படும் திணறல் போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் நித்யா, மூச்சுத் திணறலுக்கான பல்வேறு காரணங்களையும், அதற்கான எளிய சித்த மருத்துவத் தீர்வுகளையும் விளக்கியுள்ளார்.
Advertisment
மூச்சுத் திணறலுக்கான காரணம் என்ன?
ரத்தசோகை: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ஆக்ஸிஜன் செல்களுக்குச் சரியாகச் சென்றடைவதில்லை. இதனால் மூச்சு வாங்குதல் ஏற்படும். பெண்களுக்கு இது பொதுவான காரணமாகும். சோர்வு, தலைச்சுற்றல், அதிக வியர்வை போன்றவை அறிகுறிகள்.
உடல் பருமன்: உடல் எடை அதிகரிப்பதும், ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் உடல் பருமனும் மூச்சுத் திணறலுக்குக் காரணம்.
சத்துக் குறைபாடு: உடலில் ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் பி12 குறைவதும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும்.
கொலஸ்ட்ரால்: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதும் மூச்சு வாங்குதலை ஏற்படுத்தும்.
செரிமானப் பிரச்னைகள்: சரியாகச் செரிமானம் ஆகாதபோது, வயிற்றில் வாயு சேர்ந்து வயிறு உப்புசமாகி, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதுவும் மூச்சுத் திணறலுக்கு முக்கிய காரணமாக அமையலாம்.
வயது: 40 வயதுக்கு மேலும், 50 வயதைக் கடந்தவர்களுக்கு உடலில் இயற்கையாகவே ஸ்டாமினா குறைவதால் மூச்சு வாங்குதல் ஏற்படும்.
இதய மற்றும் நுரையீரல் பிரச்னைகள்: இதயத் துடிப்பு அதிகரித்தல், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட ஆஸ்துமா, வீசிங், சைனசைட்டிஸ், நேசல் பாலிப், பிராங்கைடிஸ் (மூச்சுப் பாதையில் சளி சேருதல்) போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மூச்சுத் திணறலின் முக்கிய காரணிகளாகும். நுரையீரல் நீர்க்கோப்பு (Pulmonary Edema) போன்ற தீவிர நிலைகளிலும் மூச்சுத் திணறல் ஏற்படும்.
மருந்துகளின் பக்கவிளைவுகள்: சில மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணமாகலாம்.
எளிமையான சித்த மருத்துவத் தீர்வுகள்:
Advertisment
Advertisements
மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாக உடலில் ஹீமோகுளோபின், ஆக்ஸிஜன் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதிப்பது அவசியம் என்கிறார் டாக்டர் நித்யா. சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.
முக்கியமான சித்த மருந்துகள்:
விழுதி கர்ப்பம்: நுரையீரல் மற்றும் இதயத்தை பலப்படுத்தும் சிறந்த மருந்து. ஆஸ்துமா, வீசிங், நுரையீரல் நீர்க்கோப்பு, மற்றும் ரத்த சுத்திகரிப்பு மருந்துகள் எடுக்கும் நோயாளிகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். விளையாட்டு வீரர்களுக்கும் கொடுக்கப்படுவதாகக் கூறுகிறார்.
திப்பிலி ரசாயனம்: நுரையீரலில் நாள்பட்டுத் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற இந்த மருந்து சிறந்தது.
பஞ்சதீபாக்கினி சூரணம்: செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். தேனுடன் கலந்து தினமும் இருவேளை ஐந்து முதல் பத்து நாட்களுக்குச் சாப்பிட, செரிமானப் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். இதன் மூலம், இரத்த உற்பத்தி மேம்பட்டு, மூச்சுத் திணறல் குறைய உதவும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: அதிக உடல் எடை கொண்டவர்கள், உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மூலம் எடையைக் குறைக்க வேண்டும். பீட்ரூட், பேரீச்சம்பழம், முருங்கைக்கீரை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் நடைப் பயிற்சி மேற்கொண்டு, மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்வது நுரையீரலை பலப்படுத்தும் என்கிறார் டாக்டர் நித்யா.
மூச்சுத் திணறல் ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், சில சமயங்களில் இது தீவிர நோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே, தொடர்ச்சியான மூச்சுத் திணறல் இருந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, சிகிச்சைகளை மேற்கொள்வது முழுமையான குணமடைய உதவும் என்று டாக்டர் நித்யா அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.