பிக் பாஸ் தொடர்ந்து என்னதான் ஆச்சு? – மனம் திறக்கும் பிக் பாஸ் ஓவியா!

What happened to Bigg Boss Oviya Tamil news எது எப்படியோ, எனக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்கிற நிம்மதியோடு என் நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறேன்

What happened to Bigg Boss Oviya Tamil news
What happened to Bigg Boss Oviya Tamil news

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெற்ற புகழை வைத்து ஏராளமான சினிமா வாய்ப்புகள் கிடைக்கும், அடுத்த சூப்பர் ஸ்டாராக நிச்சயம் வலம்வருவார் என்று ஓவியா மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், இருக்கும் இடம் கூட தெரியாத அளவிற்கு மறைந்துவிட்டார். என்னதான் ஆச்சு ஓவியாவுக்கு? என்ன செய்துகொண்டிருக்கிறார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான விடைகளைச் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

“லாக் டவுனை அடுத்து என்னுடைய அப்பா மற்றும் நாய்க்குட்டி உடன் நேரம் செலவழித்து வருகிறேன். திரைத்துறையில் பெரிய வாய்ப்புகள் எதுவுமில்லை. எனக்கா ஏதாவது மாடலிங் தோணுச்சுனா அது செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். நான் 17 வயதிலிருந்து சம்பாதித்து வருகிறேன். என்னைப் பொறுத்து வரைக்கும் பெண்கள் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கவேண்டும். கையேந்தி பவனோ 5 ஸ்டார் ஹோட்டலோ, எங்கேயும் என் சம்பாத்தியத்தில் சாப்பிடவேண்டும் என்று நினைப்பேன்.

பிக் பாஸ் பொறுத்தவரையில், நான் எதையும் எதிர்பார்த்து அங்குப் போகவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைவைத்து ஏன் எதையும் பெரிதாக செய்யவில்லை என்கிற கேள்வி பலரிடம் எழுகிறது. அவர்கள் யாருக்கும் ஸ்க்ரீனுக்கு பின்னாடி என்ன நடக்கிறது என்பது தெரியாது. அதையெல்லாம் சொல்லவும் முடியாது. என்னைப் பொறுத்த வரையில், அப்படியெல்லாம் செய்துதான் எனக்கு வாய்ப்பு வரவேண்டும் என்ற அவசியமில்லை. அதேபோல நான் எந்தவிதமான பந்தயத்திலும் இப்போது இல்லை.

திரைத்துறையைப் பொறுத்தவரையில் இது ஆணாதிக்கம் அதிகம் உள்ள துறை. அவர்களின் சம்பளம் மற்றும் எங்களுடைய சம்பளத்தை ஒப்பிட்டால் உங்களுக்கே தெரியும். எனக்கு தெரிந்து தமிழ் திரைத்துறையில்தான் பாலியல் ரீதியான பிரச்சனைகள் கம்மி. எனக்குப் பின்னால் வருபவர்கள், என்னைப் போன்றவர்களைப் பார்த்து விழிப்புடன் இருந்தால் அதுவே போதும். நாளுக்கு நாள் நல்ல மனிதனாக இருக்கவே நான் நினைக்கிறேன்.

புது இயக்குனராக இருந்தால்கூட, ஸ்க்ரிப்ட் நல்லா இருக்கா, கதாபாத்திரம் நல்ல இருக்கா என்பதை மட்டும்தான் நான் பார்ப்பேன். சம்பளம்கூட இரண்டாவதுதான். வேற எந்தவிதமான க்ரைடீரியாவையும் நான் பார்ப்பதில்லை. எந்த சூழ்நிலையிலும் நம்மை நாம் விட்டுக்கொடுக்காமல் வாழவேண்டும். இது சொல்வது எளிது. ஆனால், அப்படி வாழ்வது கடினம். அதிலும் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சவாலான விஷயம்தான். எது எப்படியோ, எனக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்கிற நிம்மதியோடு என் நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறேன்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What happened to bigg boss oviya tamil news

Next Story
காலையில் சீரகம், கொத்தமல்லி, நல்லெண்ணெய்… சிம்பிளான ஆயுர்வேத டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com