பழங்கள் சாப்பிடுவது சீரான உணவுமுறையை பெற சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகபட்சமாக பழங்கள் சாப்பிடுவதும் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்கிறது. அதிகப்படியான பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கப்பெறும் ஃப்ரக்டோஸ், கல்லீரலை பாதிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர் கவிதா தேவ்கன் தெரிவித்துள்ளார்.
எனினும், இது குறித்து அறிந்து கொள்ள மேலும் சில வல்லுநர்களிடமிருந்து கருத்துகள் சேகரிக்கப்பட்டது.
உடல் எடையை குறைப்பதற்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்பவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், இது போன்ற உணவுமுறையை யாரும் பரிந்துரைப்பது இல்லை என மருத்துவர் உதய் சங்லோத்கர் தெரிவித்துள்ளார். எனினும், பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் கல்லீரல் பாதிக்கப்படும் எனக் கருதப்பட்டாலும், இது குறித்து ஆய்வு அறிக்கைகளில் நிரூபிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
"அதிகப்படியான பழங்களை உட்கொள்வது கல்லீரல் நோய்களை ஏற்படுத்துவதாக பதிவாகவில்லை. இருப்பினும், அதிகப்படியான பழங்களை உட்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், அவை கவனிக்கப்பட வேண்டும், ”என்று மருத்துவர் சங்லோத்கர் கூறினார்.
நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்திருப்பதால், அதிகமாக பழங்களை உட்கொள்வது வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அவை மலமிளக்கிய உணர்வையும் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மருத்துவர் சங்லோத்கர், பழத்தில் உள்ள இயற்கை அமிலங்கள் மற்றும் சர்க்கரைகள் பல் சிதைவு போன்ற பல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறார். "அதிக சர்க்கரை அசாதாரண இரத்த சர்க்கரை அளவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் நீரிழிவு, ஹைப்பர் கிளைசீமியா அல்லது கணைய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இவை நல்லதல்ல," என்று தெரிவித்துள்ளார்.
பழத்தில் உள்ள ஃப்ரக்டோஸ், இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் சங்லோத்கர் தெரிவித்துள்ளார். “பழங்களை மட்டும் சாப்பிடுவதற்குப் பதிலாக சத்தான உணவைச் சாப்பிடுவது நல்லது. எந்த உணவுமுறையையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று மருத்துவர் சங்லோத்கர் அறிவுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“