பெரும்பாலான மக்கள், ஒவ்வொரு நாளும் 1 டீஸ்பூன் (சுமார் 5 கிராம்) கோகோ பவுடரை உட்கொள்வது பாதுகாப்பானது என்று ஊட்டச்சத்து நிபுணர் மீனு பாலாஜி கூறினார். இருப்பினும், அதிக ஃபிளவனோல் உள்ளடக்கம் கொண்ட கோகோவை 2.5 கிராமுக்கு மிகாமல் உட்கொள்ள ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்துகிறது. கோகோ பவுடரைச் பாலுடன் சூடான பானமாக அருந்த பரிந்துரைத்தது.
பச்சையான கோகோவில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, ஏனெனில் அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும். கோகோ பவுடர் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவக்கூடும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் கோகோவில் உள்ள ஃபிளாவனாய்டுகள் அறிவாற்றல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கக்கூடும். மேலும் நாம் வயதாகும்போது சிறந்த மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
கோகோவை எடுத்துக் கொள்வதற்கான அளவு என்ன?
ஊட்டச்சத்து நிபுணர் பாலாஜி கூறுகையில், ஒரு நாளைக்கு 1 முதல் 2 டீஸ்பூன் வரை கோகோ உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் புதியவராக இருந்தால் உங்கள் உடல் எப்படிசெயல்படுகிறது என்பதை பார்த்து சிறிய அளவில் எடுக்கலாம் என்றார்.
கோகோ - ஏதேனும் உடல்நல பிரச்னைகள் ஏற்படுமா?
கோகோ பவுடர் பலருக்கு நன்மை தரக்கூடியது. அதே வேளையில், சில நபர்கள் தொடர்ந்து உட்கொள்வதால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பாலாஜி. இனிப்பு சுவை இல்லாத கோகோ தூளில் 15 கிராமில் 300 மி.கி. என்ற அளவில் தியோப்ரோமைன் இருக்கலாம். அதிகமாக உட்கொள்வது தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரிப்பு அல்லது பதட்டத்திற்கு வழிவகுக்கும்.
செரிமானக் கோளாறுகள்: அதிக அளவு கோகோ பவுடரை உட்கொள்ளும்போது சிலருக்கு வயிற்று வலி அல்லது செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.
ஒவ்வாமை பிரச்னை: கோகோ சில நபர்களுக்கு கடுமையான ஒவ்வாமைகளை ஏற்படுத்தும், சில நேரங்களில் அவசர சிகிச்சை கூட தேவைப்படலாம். நீங்கள் ரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொண்டால், எச்சரிக்கையாக இருங்கள்; கோகோ இரத்த அழுத்தத்தை மேலும் குறைத்து, சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பாலாஜி.
சென்னை ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (DU) விரிவுரையாளருடம், ஊட்டச்சத்து நிபுணருமான ஐஸ்வர்யா, கோகோவில் ஆக்சலேட் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால், சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார். இதில் மிதமான அளவு காஃபின் மற்றும் தியோப்ரோமைன் உள்ளது. எனவே உணர்திறன் உள்ளவர்களுக்கு தூக்கமின்மை மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதால், தினசரி உட்கொள்ளலைத் தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தினார்.