பால் பொருட்களில் அதிகபடியான பயன்பாட்டில் உள்ளது யோகர்ட். இந்நிலையில் இதன் சுவை மற்றும் தன்மைக்காக எல்லா உணவுடனும் இது பொருந்திச் செல்லும். மீல்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்பு வகைகளாகவும் இதை நாம் சாப்பிடலாம்.
இந்நிலையில் தினமும் யோகர்டை நாம் எடுத்துகொண்டால் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் புரோபயாட்டிக்ஸ் , புரத சத்து மற்றும் தேவையான சத்துகள் உள்ளது.
இதில் புரோபயாட்டிக்ஸ் உள்ளதால், குடலில் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஜீரணத்தை சீராக்குகிறது. இதில் கால்சியம், புரோட்டீன், வைட்டமின்ஸ் உள்ளது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நல்ல மனநிலையை கொடுக்கும். சிந்தனை ஆற்றலை அதிகரிக்கும்.
இந்நிலையில் இதில் இல்லாதது வைட்டமின் டி சத்து மட்டுமே. ஆனால் இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு உதவியாக உள்ளது. இதில் உள்ள புரத சத்து சதைகளை சீராக்க உதவுகிறது. தசைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி சத்து ஒட்டு மொத்த உடல் இயக்கத்தையும் சரி செய்ய உதவுகிறது. மேலும் ஆற்றலை தருகிறது.
இதில் அதிக புரத சத்து உள்ளதால், வயிறு முழுவதும் நிறம்பும் படியாக இருக்கும். இதனால் நாம் அதிக கலோரிகளை சாப்பிடமாட்டோம்.
இந்நிலையில் யோகர்ட்டை நாம் தேர்வு செய்யும்போது, அதில் சர்க்கரை, செயற்கையான சுவைகளை சேர்க்காமல் இருக்க வேண்டும். ப்ரோபயாட்டிக் தன்மை கொண்ட யோகர்ட்டை தேர்வு செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“