/indian-express-tamil/media/media_files/2025/03/16/0m7h7vhsUhKIvaPc9MoT.jpg)
3 நாள் திராட்சை மோனோ டயட் உங்கள் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்! என்கிறார் இன்ஸ்டா பிரபலம் சின்தியா ப்ரோம்லி.
திராட்சையின் மோனோ டயட் நிணநீர் ஓட்டத்தை ஊக்குவிக்கும். உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பை எரித்து, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்றும் அவர் கூறி உள்ளார். திராட்சை மோனோ டயட் பாதிப்புகள், பிரச்னைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மோனோ டயட் என்றால் என்ன?
பலரும் எடை குறைப்பிற்காக உடற்பயிற்சி செய்தல், உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல், எடை குறைப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற விஷயங்களை செய்கின்றனர், அதில் இந்த மோனோ டயட் முறையும் அடங்கும். மோனோ டயட் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ஊட்டச்சத்து நிபுணர் பயல் கோத்தரி, 24 முதல் 72 மணி நேரம் வரை ஒரே ஒரு உணவுப் பொருளை மட்டுமே உட்கொள்வதுதான் மோனோ டயட் என்றார்.
ஒரே உணவை மட்டும் சாப்பிடுவதன் மூலம், செரிமான அமைப்பு சிக்கலான கலவையால் நிரம்பி அதிக சுமை ஏற்படுத்தாது, இது சில நேரங்களில் அஜீரணம் அல்லது பிற செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார் கோத்தரி .
திராட்சை மோனா டயட் - உடலுக்கு நன்மையா?:
3 நாள் திராட்சை மோனோ டயட் என்பது நீரேற்றம், நிணநீர் வடிகட்டலுக்கு உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து ஓய்வு போன்ற குறுகிய கால நன்மைகளைக் கொண்ட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட உணவாகும் என்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவ நிபுணர் வீணா கூறினார்.
திராட்சையில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் உள்ளன, உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன மற்றும் செரிமானத்திற்கு உதவுகின்றன. இருந்தபோதிலும், இதில் சில ஊட்டச்சத்துக்கள் குறைபாடு இருப்பதால் சோர்வு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபாடு ஏற்படுவதாகவும் அவர் விளக்கினார். நீரிழிவு நோயாளிகள் திராட்சையை மட்டும் உட்கொள்வது செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார் வீணா. இது சீரான உணவு முறை அல்ல என்றும் அவர் கூறினார்.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.