குழந்தையின் செரிமான மண்டலத்தில் மண் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். Photograph: (Image Source: Freepik)
குழந்தைகள் வெளியில் விளையாடுவதை விரும்புகிறார்கள், மேலும், அவர்களின் ஆர்வமுள்ள மனது எப்போதும் இயற்கை வழங்கும் வண்ணமயமான மற்றும் அமைப்பு நிறைந்த பொருட்களால் ஈர்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு கைப்பிடி மண் அல்லது சேற்றை வாயில் போட்டுக்கொள்வது நீங்கள் கேள்விப்பட்டிராத பொதுவான விஷயம் அல்ல. ஆனால், குழந்தைகள் தற்செயலாக மண் சாப்பிடும்போது உண்மையில் என்ன நடக்கும்? indianexpress.com ஒரு சுகாதார நிபுணருடன் பேசி தெளிவுபடுத்தியது.
ஆஸ்டர் ஒயிட்ஃபீல்ட் மருத்துவமனை, பெங்களூருவ குழந்தைகள் நலத் துறை தலைவர், ஆலோசகர் – குழந்தைகள் மற்றும் நியோனாட்டாலஜி மருத்துவர் ஸ்ரீனிவாச மூர்த்தி சி.எல், குழந்தைகள் தற்செயலாக அழுக்கை சாப்பிடும்போது, முதலில், அவர்களின் உடல் அந்நிய பொருளை கையாள முயற்சி செய்யலாம், இதன் விளைவாக, வயிற்றில் லேசான தொந்தரவுகளை, அதாவது லேசான வாந்தி அல்லது குமட்டலை தூண்டலாம் என்றார். உட்கொள்ளப்பட்ட மண்ணிலிருந்து உடலை சுத்தப்படுத்தும் முயற்சியில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கைத் தூண்டலாம்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்த தீவிர பிரச்னைகளும் ஏற்படுவதில்லை. ஆனால், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் அல்லது நச்சுத்தன்மைகளை செரிக்கும் அபாயம் எப்போதும் உள்ளது. இது கடுமையான சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார். தீர்க்கப்படாத எந்த அறிகுறிகளையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் மற்றும் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
Advertisment
Advertisements
இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துமா?
சில அழுக்கு அல்லது மண்ணை உட்கொள்வது ஒரு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் ஒரு பங்கு வகிக்கக்கூடும் என்று டாக்டர் மூர்த்தி கூறினார். இந்த கருத்து சுகாதாரம் கருதுகோள் (hygiene hypothesis) என்று அழைக்கப்படுகிறது. நுண்ணுயிரிகளுடன் ஆரம்பகால வெளிப்பாட்டால் நோய் எதிர்ப்பு அமைப்பு சிறந்த சமநிலையைக் கொண்டிருக்கும் என்ற கருத்தை இது ஆதரிக்கிறது.
குழந்தையை மண் விழுங்குவதிலிருந்து விலக்கி வைக்கவும். Photograph: (Image Source: Freepik)
"இந்த வெளிப் பொருட்களுடன் குழந்தையின் இயற்கையான வெளிப்பாட்டின் காரணமாக, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி நல்ல முகவர்களை கெட்ட முகவர்களிலிருந்து வேறுபடுத்த கற்றுக்கொள்கிறது. இது குழந்தைக்கு பிற்கால வாழ்க்கையில் எந்த ஒவ்வாமை எதிர்வினைகளையும் அல்லது தன்னுடல் தாங்குதிறன் நோய்களையும் உருவாக்குவதைத் தடுக்க உதவுகிறது" என்று அவர் விளக்கினார்.
அதனுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்கள் என்ன?
குழந்தைகள் தற்செயலாக மண் உட்கொள்வதால் ஏற்படும் சுகாதார அபாயங்கள், மண்ணின் வகை மற்றும் அதன் மாசுபடும் அளவைப் பொறுத்து மாறுபடும். "கடுமையான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் அபாயங்களில் ஒன்று இ கொலி (E. Coli) அல்லது சால்மோனெல்லா போன்ற நோய்க்கிருமி நுண்ணுயிரிகளை உட்கொள்வது, இது இரைப்பைக் குடல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. பல்வேறு பாக்டீரியாக்களைத் தவிர, மண்ணில் உள்ள ஒரு ஒட்டுண்ணியான ஜியார்டியா (Giardia), சில செரிமான சிக்கல்களையும் உடலில் இருந்து நீர் இழப்பையும் ஏற்படுத்தலாம்" என்று டாக்டர் மூர்த்தி கூறினார்.
மண்ணில் பூச்சிக்கொல்லிகள், கன உலோகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் போன்ற ரசாயனங்களும் இருக்கலாம், இது மேலும் நாள்பட்ட சுகாதார அபாயங்களுக்கு வழிவகுக்கும். சில உணர்திறன் கொண்ட குழந்தைகள் மண்ணில் உள்ள ரசாயன பொருள்களால் ஒவ்வாமை எதிர்வினைகளையும் அனுபவிக்கலாம்.
உண்மையில், இயற்கையான மண் வெளிப்பாடு ஒரு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை நேர்மறையாக மேம்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் மிகவும் மாசுபட்ட இடங்களுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், அத்தகைய பொருட்களை அதிகமாக அல்லது அடிக்கடி உட்கொள்வது பாதகமான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தலாம். மிதமான நடைமுறையைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார், ஏனெனில் மண் அல்லது அழுக்கை அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுத் களத்தில் உள்ள தகவல் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்கும் முன் எப்போதும் உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.