ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் பல் துலக்காமல் தவிர்ப்பது பெரிய விஷயமாகத் தெரியாது. ஆனால் நீண்ட காலம் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வாயில் பாக்டீரியாக்கள் எளிதாக நுழையும். நீங்கள் சரியாக பல் துலக்காமல் இருந்தால் பாக்டீரியாக்கள் பெருகி, வாய் துர்நாற்றம் வீசும் பற்கள் கறைபடிய வழிவகுக்கும்.
பிடம்புராவில் உள்ள க்ரவுன் ஹப் டென்டல் கிளினிக்கின் புரோஸ்டோடான்டிஸ்ட் டாக்டர் நியாதி அரோரா, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “நீங்கள் பல் துலக்குவதை நிறுத்தினால் முதலில் பற்களில் soft plaque படியும். இந்த plaque பாக்டீரியாவால் நிரம்பியுள்ளது மற்றும் ஈறுகளை எரிச்சலூட்டுகிறது, இது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
மேலும் இந்த வீக்கமடைந்த ஈறுகளை தொடும்போது மிக எளிதாக ரத்தக் கசிவு ஏற்படும் என்றார்.
உடல் நலம் பாதிப்பு
வாய் நம் உடலின் நுழைவுவாயில் என்கிறார் டாக்டர் அரோரா. எனவே, வாய்வழி சுகாதாரத்தை புறக்கணிப்பது மோசமான பல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அதே நேரம் மற்ற உடல் உறுப்புகளையும் பாதிக்கும் என்கிறார் மருத்துவர்.
இதய பிரச்சனை
மோசமான வாய் ஆரோக்கியத்திற்கும் இதய நோய்க்கும் இடையே உள்ள பொதுவான தொடர்பு ஈறு அழற்சி ஆகும், இது நச்சுகளை வெளியிடுகிறது. இந்த நச்சுகள் இரத்த ஓட்டத்தின் வழியாக இதயத்தை பாதிக்கிறது. இவை எண்டோகார்டிடிஸ், அடைபட்ட தமனிகள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
நீரிழிவு நோய்
ஈறுகளில் ஏற்படும் அழற்சியானது சிக்கலான சர்க்கரைகளை உடைக்கவும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இன்சுலினை திறம்பட பயன்படுத்துவதற்கான உடலின் திறனை பலவீனப்படுத்துகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Find out what happens to the body when you don’t brush teeth for a month
இது உயர் ரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தும், இது பாக்டீரியா வளர்ச்சிக்கு சாதகமான சூழலை வழங்குகிறது. நல்ல வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் இதை தடுக்க முடியும்.
கர்ப்பகால சிக்கல்கள்
மோசமான பல் ஆரோக்கியம் முன்கூட்டிய பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கவும் வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“