Advertisment

கறிவேப்பிலை, சீரகம்… இப்படி செய்து எடுத்துகொள்ளுங்க… உடல் கொழுப்பு வேகமா குறையும்

கறிவேப்பிலையில் பல்வேறு நன்மை இருக்கின்றன. இதற்கு ஒரு நல்ல வாசனை உண்டு . தினமும் நான் கறிவெப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
New Update
sada

கறிவேப்பிலையில் பல்வேறு நன்மை இருக்கின்றன. இதற்கு ஒரு நல்ல வாசனை உண்டு . தினமும் நான் கறிவெப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

Advertisment

இது மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்பதால், கொழுப்பை எரிக்க உதவும். இதில் உள்ள கார்பசோல் ஆல்கலைட்ஸ், உடல் பருமனுக்கு எதிரான தன்மைகள் கொண்டது. இது உடல் எடையை குறைக்க உதவுவதுடன், ஜீரணம், இதய நோய்யை, கொலஸ்ட்ராலை குறைக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், நமது உடல் தேவையான சத்துகளை உறிஞ்சிக்கொள்ள உதவும். இந்நிலையில் உடல் எடையை குறைக்க இந்த ரெசிபியை டிரை பண்ணுங்க

செய்முறை : ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் 1 ஸ்பூன் சீரகம் மற்றும் 12 கறிவேப்பிலை இலைகளை சேர்க்கவும். 3 முதல் 4 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும்.

இந்த டீ உடல் கொழுப்பு சத்தை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் கருவேப்பிலை, சீரகம், மஞ்சளின் நன்மைகள் உள்ளது. இதனால் கொழுப்பு வளர்ச்சியை தடுக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment