நாம் தினமும் பால் குடித்தால் என்ன ஆகும் என்பதை தெரிந்துகொள்ளலாம். இது ஒட்டுமொத்தமாக உடல் நலத்துக்கு உதவும். இதில் உள்ள வைட்டமின் டி, வலுவான எலும்புகளை உருவாக்கவும், பற்களை உருவாக்க உதவுகிறது.
இதில் உள்ள புரத சத்து, நமது தசைகளை உருவாக்க உதவும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் அதை சீராக்க உதவும். தசைகளை வலுவாகவும், சக்தியாக உணர வைக்கும்.
இதில் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் உள்ளது. இதில் வைட்டமின் பி12 உள்ளது. இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நமது உடல் தொற்றுகளுக்கு எதிராக போராட உதவும்.
இந்நிலையில் பால், நமது ஒட்டுமொத்த திரவ வகைகளின் அளவுக்கு ஈடு செய்யும். இதனால் உடலில் வரட்சி ஏற்படாது. இந்நிலையில் நாம் நீண்ட நாட்கள் பாலை தினமும் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாது. இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய்களை தடுக்கும்.
இந்நிலையில் நாம் தசைகளை வலுவாக்க முயற்சிக்கும்போது, பாலை நாம் தொடர்ந்து எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இதில் உள்ளது சாச்சுரேடட் கொழுப்பு சத்து. இதை எடுத்துகொள்வதால் கெடுதல் ஏற்படாது. ஆனால் அதிக அளவில் நாம் எடுத்துகொண்டால், இதய நோய் ஏற்படலாம். அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் அதிக அளவில் இதை எடுத்துகொள்ள வேண்டாம்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“