அவக்கடோ மீது உள்ள கவனம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அவக்கடோவை எடுத்துகொண்டா. ஒரு வேளை உணவில்., தொடர்ந்து 90 நாட்கள் எடுத்துகொண்டால் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அவக்கடோ வைத்து செய்யப்பட்ட ஆய்வில், 12 வாரங்கள், பருமன் நிறைந்த பெண்களுக்கு அவக்கடோ கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவகடோ எடுத்துகொண்ட பெண்களின் வயிற்றுப் பகுதி கொழுப்பு குறைந்துள்ளது.
மேலும் இதில் மொனோசாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நன்மை உண்டாக்கும். இந்த கொழுப்பு சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். இதனால் இதய ரத்த குழாய்கள் அரோக்கியமாக இருக்கும்.
மேலும் இதில் நல்ல அளவில் நார்சத்து உள்ளது. இந்த நார்சத்து ஜீரணத்திற்கு உதவுகிறது. இது வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கி, மலச்சிக்கலை தடுக்கும். இதில் பொட்டாஷியம், வைட்டமின் கே, வைட்டமின் இ, போலேட் உள்ளது. உடலில் உள்ள நீரின் அளவை சீர்படுத்துவது, நரம்புகளின் செயல்பாடுகள், சதைகள் சுருங்கி விரிவது போன்ற முக்கிய செயல்பாடுகளுக்கு பொட்டாஷியம் தேவையாக உள்ளது. ரத்தம் உறையவும், எலும்புகளுக்கும் வைட்டமின் கே முக்கியமாக உள்ளது. செல்கள் சேதமடைவதிலிருந்து வைட்டமின் இ காப்பாற்றுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு போலேட் மிகவும் அவசியமாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“