கீரை ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிறைந்த உணவு. இதை உங்கள் அன்றாட உணவில் சேர்க்குமாறு உணவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது ஆரோக்கிய நன்மைகளுடன் நிரம்பியுள்ளது, மேலும் வழக்கமான நுகர்வு உங்கள் இரும்பு உள்ளடக்கம், புரதம் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆனால், தினமும் பலாக் கீரை என்று அழைக்கப்படும் கீரையைச் சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான கரிமா கோயல், இலைக் காய்கறிகளை “வரையறுக்கப்பட்ட அளவில்” எடுத்துக் கொண்டால், தினமும் சாப்பிடுவது பாதுகாப்பானது என்கிறார்.
1. வைட்டமின்களின் தினசரி டோஸ்
“கீரையில் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளன.
தினமும் ஒரு கிண்ணம் கீரையை உட்கொள்வது, தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்" என்று நிபுணர் கூறுகிறார். வைட்டமின் சி-யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் "தோல் ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிக்கின்றன மற்றும் முன்கூட்டிய வயதாவதைத் தடுக்கின்றன".
வைட்டமின் ஏ வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்கிறது, மேலும் அதன் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கை வீக்கத்தைக் குறைத்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
2. எலும்பு மற்றும் தசை ஆரோக்கியம்
கீரை கால்சியத்தின் வளமான ஆதாரம் என்று கோயல் கூறுகிறார், இது ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உதவுகிறது மற்றும் கொலாஜன் உருவாக்கம் காரணமாக தசை வளர்ச்சியை அதிகரிக்கும்.
3. இதய ஆரோக்கியம்
இரும்புச்சத்து’ ஹீமோகுளோபின் அளவை அதிகளவில் வைத்திருப்பதன் மூலம் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. கீரையில் நைட்ரிக் ஆக்சைடு உள்ளது, இது உங்கள் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் (atherosclerosis) வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கிறது.
4. சர்க்கரை அளவு கட்டுப்பாடு
கீரையில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிரம்பியுள்ளது, இவை இரண்டும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது, சிறந்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது. நார்ச்சத்து இரைப்பை தாமதத்தை (gastric delay) குறைக்கிறது மற்றும் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.
“தினமும் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள் இவை என்றாலும், அதை அதிகமாக உட்கொள்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆக்ஸாலிக் அமிலம் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் தலையிடலாம், மேலும் சிறுநீரக கல் உருவாவதையும் தூண்டலாம் ”என்று உணவியல் நிபுணர் எச்சரிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“