இளநீர் இதில் அதிக நன்மைகள் உள்ளது. இது இயற்கையான எலக்ட்ரோலைட் போல் செயல்படும். மேலும் இதில் உள்ள பொட்டாஷியம், மெக்னீசியம் நமது இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
இளநீரில் மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் இருக்கிறது. 1 கப் இளநீரில், 60 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் டைப் 2 சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும். மேலும் ரத்த அழுத்தம் குறையும்.
இதில் உள்ள அதிக பொட்டாஷியம் அளவு ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதனால் இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படாது. இளநீரில் உள்ள சத்துகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் தொடர்ந்து இளநீர் குடித்தால் சிறுநீரக கல் ஏற்படாது.
இதில் உள்ள நீர் சத்துகள், நமது சருமத்திற்கு உதவியாக உள்ளது. இது நமக்கு இளமையான தோற்றம் கொடுக்கும். முகப்பரு போன்ற விஷயங்கள், நம்மை பாதிக்காது.
இந்நிலையில் இதை அதிகமாக குடித்தால், அதிக சர்க்கரை மற்றும் அதிக கலோரிகள் உடலுக்கு கொடுக்கும். இதனால் உடல் எடை அதிகமாகலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“