நாம் ஒரு மாதத்திற்கு பழங்களை மட்டும் சாப்பிட்டால் என்ன மாற்றம் வரும். பாலை சாப்பிடாமல் தவிர்தால் என்ன ஏற்படும் என்று பலன்களை பற்றி அதிகமாக கேள்விபட்டிருப்போம்.
இந்நிலையில் நாம் அன்னாச்சி பழம் சேர்ந்த தண்ணீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். இப்படி செய்வதால், ஜீரணம் சீராகும். தொடர்ந்து நிலையான உடல் எடை குறையும்.
அன்னாச்சி பழ தண்ணீர் இயற்கையாகவே உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றும். இதனால் வீக்கம் குறையும். உடலில் உள்ள ஒட்டுண்ணி நோய்கள் ஏற்படாது. நமது பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தைராய்டு தொடர்பான சிக்கல் ஏற்படாமல் வைத்திருக்கும். புற்று நோய் ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
அன்னாச்சி பழத்தில் புரோமிலின் என்ற என்சைம் உள்ளது. இதனால் வயிறு உப்புதல் குறையும். ஜீரணம் சக்தி அதிகமாகும். மேலும் இந்த புரோமிலின் குடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ளும். இதனால் உடலினுள் தீங்கான ஒட்டுண்ணிகள் வாழாது. உடலில் உள்ள நஞ்சுகளை நீக்கும். கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இது மூட்டுவலிகளை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் சி நமது கண் பார்வையை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது ஆரோக்கியமான பற்கள், எலும்புகள் பெற உதவியாக இருக்கும். இதில் உள்ள ஐயோடின் சத்து தைராய்டு ஏற்படாமல் தடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“