/indian-express-tamil/media/media_files/2025/05/13/egcqg2nMsSYgI0tKk4QT.jpg)
எல்லோரும் விரும்பி சாப்பிடும் பன்னீரில் கலப்படம்? இப்படி ஈஸியா கண்டுபிடிங்க!
பலரும் விரும்பும் பாலாடைக் கட்டியான பன்னீரில் கலப்படம்!. நம்ப முடிகிறதா? ஆம்.!
இன்றைய கலப்பின உலகில், போலி பனீரும் சந்தையில் விற்கப்படுகிறது. இது அனலாக் பனீர் என்று அழைக்கப்படுகிறது. இது சட்டவிரோதமானது அல்ல என்றாலும், பெரும்பாலும் சாதாரண பனீராக நமக்கு விற்கப்படுகிறது. இதை எவ்வாறு வேறுபடுத்துவது? இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? என்பதை தெளிவாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
அனலாக் (அ) செயற்கை பனீர் என்பது செயற்கை பொருட்கள், இரசாயன சேர்க்கைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் அல்லாத வழக்கமான பனீர் வகையாகும். ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள், டிரான்ஸ் கொழுப்புகள், ஸ்டார்ச், கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் பல இரசாயன கலவைகளால் அனலாக் பன்னீர் தயாரிக்கப்பட்டுகிறது.
எலுமிச்சை சாறு (அ) வினிகர் போன்றவற்றுடன் பாலைத் திரியச் செய்வதன் மூலம் வழக்கமான பன்னீர் தயாரிக்கப்படுகிறது. மாறாக, அனலாக் பனீர் அதிக அளவில் பதப்படுத்தப்படுகிறது மற்றும் உண்மையான பனீர் அமைப்பையும் தோற்றத்தையும் பிரதிபலிக்கும் கூறுகள் மற்றும் சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த போலியான தயாரிப்புக்கு முக்கிய காரணம், பொருளாதாரம்தான். அனலாக் பன்னீர் உண்மையான பன்னீரை விட மிகவும் மலிவானது, இது தயாரிப்பாளர்களையும், பாதி விலையில் பொருட்களை வாங்கும் நுகர்வோர்களையும் கவர்ந்திழுக்கிறது. இதனை உட்கொள்வதால் இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பது முதல் புற்றுநோய் மற்றும் செரிமான பிரச்சனைகள் வரை பல பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
உண்மையான பன்னீரை மெதுவாக அழுத்தும்போது அது உடையாமல் இருக்கும், அதே நேரத்தில் போலி பன்னீர் எளிதில் நொறுங்கிவிடும். மேலும் உறுதியான சோதனைக்கு, வீட்டில் எளிதாக கிடைக்கும் அயோடின் கரைசல், ஸ்டார்ச்-ஐ போலி பன்னீரில் மீது போடும்போது நீல-கருப்பு நிறமாக மாறுவதன் மூலம் கண்டறியலாம். இது அனலாக் பன்னீருக்கான தெளிவான அறிகுறியாகும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
பனீர்:
புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி மற்றும் பி12 ஆகியவற்றின் நன்மைகள் நிரம்பிய பாலில் இருந்து வழக்கமான பனீர் தயாரிக்கப்படுகிறது. இது இயற்கையான சுவை, குறைந்தபட்ச பதப்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து ஆகியவற்றின் காரணத்தால் மதிக்கப்படுகிறது. தோராயமான ஊட்டச்சத்து மதிப்பு (100 கிராமுக்கு):
கலோரிகள்: 265-300 கிலோகலோரி
புரதம்: 18-20 கிராம்
கொழுப்பு: 20-25 கிராம்
கால்சியம்: 200-300 மிகி
அனலாக்பனீர்
அனலாக் பனீரில் புரதம் குறைவாகவும், தாவர எண்ணெய்கள் மற்றும் ஸ்டார்ச் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியமற்ற கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் இருக்கும் ஒரு மலிவான வகையாகும். இதில் வழக்கமான பனீரில் காணப்படும் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் இருக்காது. தோராயமான ஊட்டச்சத்து மதிப்புகள் (100 கிராமுக்கு):
கலோரிகள்: 250-280 கிலோகலோரி
புரதம்: 5-10 கிராம்
கொழுப்பு: 15-20 கிராம் (பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகளைக் கொண்டிருக்கும்)
கால்சியம்: மிகக் குறைவு
அனலாக் பனீரையும் வழக்கமான பனீரையும் பார்த்தால் எந்த வித்தியாசமும் இருக்காது. மேலும் இது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் அனலாக் பனீரில் புரதம் மற்றும் கால்சியம் குறைவான அளவிலேயே உள்ளது, அதே நேரத்தில் வழக்கமான பனீரை சாப்பிடுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.