குருகிராமில் உள்ள உணவகத்தில் மவுத் பிரஷ்னருக்கு பதிலாக டிரை ஐஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் இதை எடுத்து கொண்ட நபர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் டிரை ஐஸ்யை மிகவும் அபாயகரமான ஒன்று என்று மரணத்தை வரவழைக்கும் ஒன்று என்று தெரிவித்துள்ளது.
டிரை ஐஸ் என்பது திடமான கார்பண்டை ஆக்ஸைடு. இது - 78.5 டிகிரி செல்ஷியஸில் உள்ளது. இது திடமான பொருளில் இருந்து வாயுவாக மாறிவிடும். சாதாரண ஐஸ்-யை போல் இது நீர் தன்மைக்கு செல்லாது. இந்நிலையில் இதை குளிர்ச்சியூட்ட மட்டும் அதிக குளிர்ச்சியாக மாற்ற உதவுகிறது.
தற்போது உள்ள உணவகங்கள் மற்றும் பாரில் டிரை ஐஸ்-ஐ சில உணவுகளை பரிமாற பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் இந்த டிரை ஐஸ் குளிமைப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் இதை சரியாக கையாளவில்லை என்றால், சுவாச பிரச்சனைகள், சருமத்தில் காயம் வரை ஏற்படலாம்.
சரியான காற்றோட்டம் இல்லாத இடத்தில், இந்த டிரை ஐஸ் வாயு வெளியானால், அங்கே கார்பண்டை ஆக்ஸ்டைடு குவிந்துவிடும். இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்.
இந்நிலையில் இந்த புகையால் கண் எரிச்சல், சிவப்பாக மாறுவது, நீர் வழிதல், அசௌகரியம் ஏற்படும். மேலும் இந்த டிரை ஐஸ் நமது வாயின் தசைகளை, வயிற்றை கடுமையான குளிச்சியாக்கும்.
இந்நிலையில் சில உணவங்களில் நமது வாயில் டிரை ஐஸ் வைத்து புகை போல் வரும்படிச் செய்வார்கள். இநிந்லையில் இதை நாம் தவறுதலாக வாயில் முழுகிவிடக்கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“