ஏற்கெனவே காதல் உறவில் இருக்கும்போது பிறருடன் நெருக்கமாகப் பேசுவது சரியா?

What is Flirting relationship rules partners discussion Tamil News இது நாளடைவில் பழக்கமாகவும் அடிமையாகவும் மாறும்

What is Flirting relationship rules partners discussion Tamil News
What is Flirting relationship rules partners discussion Tamil News

What is Flirting relationship rules partners discussion Tamil News  : இந்தக் கேள்விக்கான சரியான விடையை அவ்வளவு எளிதில் யாராலும் கூறிவிட முடியாது. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் மீதான உணர்வு வேறுபாடும். ஒரேபோன்ற உணர்வு இருவர் மீது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே, நீங்கள் ஏற்கெனவே ஒருவருடன் காதல் உறவில் இருக்கும்போது வேறொருவருடன் நெருக்கமாகப் பேசுவது சரியா தவறா என்பதற்கு ஒரு வார்த்தையில் பதில் அளிக்க முடியாது.

அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களான சம்மர் வாட்சன் மற்றும் ஜென் ஃபோண்டானிலா, தங்களின் நேரடி நிகழ்ச்சியான தி லைஃப், லவ் & Money நிகழ்ச்சி மூலம், வாழ்க்கை, காதல் மற்றும் பண விஷயங்களை நிர்வகிக்க உதவும் நடைமுறை குறிப்புகளை வழங்குகிறார்கள். அந்த வரிசையில் இந்த கேள்விக்கு பதிலளிக்க, ஒருவர் முதலில் Flirting என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

“இது ஒருவரைக் காதலில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் அல்லது அப்படி எதுவும் இல்லாமலும் இருக்கலாம். பல நேரங்களில், இது வெளிப்படையான நடத்தை,  விளையாட்டுத்தனமாக அல்லது தனிப்பட்ட முறையில், உடல் மொழியால் அல்லது எழுதப்பட்ட வடிவத்தில் இருக்கலாம். இது ஒரு நெருக்கமான உறவின் நுழைவாயிலாகவும் அல்லது ஓர் உறவை வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் நாடகமாகவும் இருக்கலாம்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், நீங்கள் ஒருவருடன் நெருக்கமாகப் பேசும்போது, அதற்கு அவர்கள் பதிலளித்தால், அதனை அற்புதமாக உணரலாம். மனிதர்களுக்கு, அவர்களின் நெருக்கமான இணையைக் கண்டறிய உதவும் ஒரு உள்ளமைக்கப்பட்ட வழிமுறை இந்த Flirting என்று நீங்கள் நினைக்கலாம். Flirting-ல் ஈடுபடும்போது, ​​மூளை மற்றும் உடல் இரண்டும் சந்தோஷம் தரும் ஹார்மோனான டோபமைனை வெளியிடுகிறது” என்று அவர்கள் விளக்குகிறார்கள்.

இருப்பினும், Flirting ஓர் சந்தோஷம் தரும் உணர்வு என்பதால் இது நாளடைவில் பழக்கமாகவும் அடிமையாகவும் மாறும் என்று சம்மர் மற்றும் ஜென் எச்சரிக்கிறார்கள்

நீங்கள் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்களே மதிப்பீடு செய்ய விரும்பினால், உங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் சில கேள்விகள் இங்கே உள்ளன.

1. நீங்கள் Flirt செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
2. இப்படி Flirt செய்வதன் மூலம் நீங்கள் எதைப் பெற விரும்புகிறீர்கள்?
3. நீங்கள் Flirt செய்வதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்களா?
4. நீங்கள் இப்படி இருப்பது உங்கள் இணையை பாதிக்கிறது என்று நினைக்கிறீர்களா?
5. Flirting பழக்கம் உங்களை சங்கடமான சூழ்நிலைகளுக்குள் தள்ளியிருக்கிறதா?
6. இந்தப் பழக்கம் எப்போதாவது வெகுதூரம் சென்று சிக்கலான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறதா?
7. உங்கள் காதல் உறவில் இல்லாதது அப்படி என்ன நீங்கள் வேறொருவருடன் நெருக்கமாகப் பேசும்போது கிடைக்கிறது?
8. உங்களுடைய இந்தப் பழக்கம் உங்கள் காதல் உறவில் பிளவை ஏற்படுத்துமா?
9. உங்கள் இணையுடன் Flirt செய்ய முயற்சி செய்துள்ளீர்களா?
10. நீங்கள் உங்கள் இணையுடன் flirt செய்ய முயன்றபோது, ​​அவர் அதனை ஏற்றுக்கொண்டாரா?

கூடுதலாக, ஒரு உறவில் Flirt செய்வது சரியா இல்லையா என்று வரும்போது, ​​இது உங்கள் இணையுடன் உங்களுக்கு இருக்கும் புரிதலுடன் தொடர்புடையது என்று பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.

“Flirting உங்கள் இணையை உங்களிடம் ஈர்க்கும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், நீங்கள் தொடர்ந்து மற்றவர்களுடன் flirt சேது கொண்டிருந்தாள், இது உறவில் முறிவை ஏற்படுத்தும். ஒருவருடன் ஏற்கெனவே காதல் உறவில் இருக்கும்போது, மற்றவர்களுடன் flirt செய்வது சரியா இல்லையா என்பதைப் பற்றி உங்கள் துணையிடம் பேசுங்கள். திறந்த மனதுடன் அதனைக் கேட்கத் தயாராக இருங்கள். முடிந்தவரை உங்கள் இணையுடன் அதிகம் flirt செய்ய முயற்சி செய்யுங்கள்”என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What is flirting relationship rules partners discussion tamil news

Next Story
முட்டை, கேரட், லெமன்… உடல் எடை குறைப்பு இவ்ளோ சுலபமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com