ஆரோக்கியமான வாழ்வை வாழ நாம் சரியான உணவை எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் பல்வேறு வகையான டயட் பிளன்களை பற்றி நாம் தெரிந்திருப்போம். இதில் இண்டர்மிட்டண்ட் பாஸ்டிங் முறையை அதிக நபர்கள் தற்போது பின்பற்றுகிறார்கள்.
சிலர் ஓ.எம்.ஏ.டி வகை டயட்டை பின்பற்றுவார்கள். இந்த டயட்டில் ஒரு வேளை மட்டுமே உணவு எடுத்துகொள்ள வேண்டும். மற்ற வேளைகளில் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
இந்நிலையில் இந்த முறையை பின்பற்றினால் உடல் எடை குறையும். மேலும் நமது உடல் இயக்கம் சரியான வழியில் சீராக செயல்படும். இன்சுலின் செயல்பாட்டை உடல் ஏற்றுக்கொள்ளும்.
இந்நிலையில் நாம் ஒரு முறை மட்டுமே சாப்பிடுவதால், சரியான அளவில் சத்துகள் உள்ள உணவை எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இதை தொடங்குவதற்கு முன்பாக சரியான டயட்டீஷியனிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
இந்நிலையில் நாம் ஒரு முறை உணவு எடுத்துகொள்வதால், மற்ற நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துகொள்ள வேண்டும். நாம் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு மற்ற வேலைகளில் சாப்பிடாமல் இருந்தால், முதலில் சோர்வு, மயக்கம், அதிக பசி, ஜீரணத்தில் பிரச்சனை ஏற்படலாம். இதனால் இதை உங்கள் உடல் ஏற்றுக்கொண்டால் மற்றும் பின்பற்றவும்.
எப்படி செய்வது ?
முதல் நாள்- 16:8 பாஸ்டிங் ( அதாவது 8 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சாப்பிட வேண்டும். 16 மணி நேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் ) .
நாள் 2 : 23 மணி நேரம் சாப்பிடாமல் இருந்து, 1 மணி நேரத்தில் இரு முறை சாப்பிடுவது.
நாள் 3 : மீண்டும் 16:8 பாஸ்டிங்
நாள் 4: 23 மணி நேரம் சாப்பிடாமல் இருந்து, 1 முறை சாப்பிடுவது.
நாள் 5 : மீண்டும் 16:8 பாஸ்டிங்
நாள் 6 : மீண்டும் 16:8 பாஸ்டிங்
நாள் 7 : 23 மணி நேரம் சாப்பிடாமல் இருந்து, 1 முறை சாப்பிடுவது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“