பெண் குழந்தைகள் பொதுவாக 14-16 வயதுக்குள் பூப்பெய்துவிடுவார்கள். இதன் பின்னர் அவர்களது உடம்பில் வேகமான வளர்ச்சி ஏற்படும்.
சில பெண் குழந்தைகள் 12-14 வயதிக்குள் பருவம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், உங்களது பெண் குழந்தை 12 வயதை கடந்துவிட்டாலே அவருக்கு பூப்பெய்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.
எனினும் சில பெண் குழந்தைகள் 16-18 வயதை கடந்தும் பூப்பெய்தல் என்னும் பருவநிலையை அடையாமல் இருக்கின்றனர். இது அரிதினும் அரிதான நிகழ்வாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
மேலும், பெண் பருவம் எட்டிய காலத்தில் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம்பித்துவிடும். அக்காலகட்டத்தில், கருவகங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரான் ஆகிய இரு வகையான ஸ்டிராய்டு ஹார்மோன்களை சுரக்கின்றன.
இந்த நிலையில் சில பெண்கள் 10 வயதுக்குள் பூப்படைந்து விடுகின்றனர். அதாவது 8-10 வயதுக்குள் இது நிகழ்ந்துவிடுகிறது. இப்படி பெண் குழந்தைகள் மிக இளம் வயதில் பூப்பெய்துவிட்டால் நீங்கள் தவறாது பெண் மருத்துவரை அணுக வேண்டும்.
ஏனெனில் சீக்கிரமே வயதுக்கு வரும் பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்னை ஏற்படலாம் என சில மருத்தவர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர் இது பிரச்னையாக வர வாய்ப்பில்லை.
பொதுவாக பெண் குழந்தைகள் பிறக்கும்போதே அவர்களின் உடலில் கருமுட்டைகள் இருக்கும். இது வயதுக்கு வந்தபின்பு அதன் தரம் கூடும். வயது ஏற ஏற கருமுட்டைகளின் தரமும் குறையும்.
எனவே பெண் குழந்தை 8 வயதுக்குள்ளோ அல்லது 10 வயதுக்குள்ளோ வயதுக்கு வந்துவிட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/