என்னதான் பண்டிகை காலங்களில், ட்ரெடிஷனல் உடைகளைத் தேர்வு செய்து அணிந்தாலும், கொஞ்சம் ட்ரெண்டி டச் இருந்தால், வித்தியாசமாக இருக்குமே, அந்த வரிசையில் இனி நவராத்திரி முதல் கிறிஸ்துமஸ் வரை ஏராளமான பண்டிகைகள் வரவுள்ள நிலையில், உங்கள் சிகை அலங்காரத்தில் சிறிதளவு மாற்றம் செய்யலாமே!
இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு முடி கொட்டினாலும், மனது பதைபதைக்கும். அந்த அளவிற்கு சிகை அலங்காரத்தில் மீது கொள்ளைப்பிரியம். அவற்றை மேலும், மெருகேற்ற சந்தையில் ஏராளமான ஹியர் கலர்ஸ் களமிறங்கிவிட்டன. அவற்றில் இப்போது எந்த நிறம் ட்ரெண்ட் மற்றும் உங்களுக்கு எந்த நிறம் பெஸ்ட் சாய்ஸ் என்பதைப் பார்க்கலாம்.
பலயாஜ் (Balayage)
நீங்கள் இயற்கையாக இருக்கும் முடியை சிறிதளவு கலர் செய்ய விரும்பினால், பலயாஜ் தேர்வு செய்யலாம். இது மிகவும் பிரபலமான ஹேர் கலர் நுட்பங்களில் ஒன்று. இதனை, ஹேர் பெயின்டிங் என்றும் அழைக்கப்படுகிறது. உங்கள் இயற்கையான முடி நிறத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு இலகுவான ஷேடுகளை இதன் மூலம் பெறலாம். இது ஒரு குறைந்த பராமரிப்பு நுட்பம். ஏனெனில், இது வழக்கமாக முடியின் நடுப்பகுதியிலிருந்து செய்யப்படுகிறது மற்றும் முடி வளரும் வரை மறுசீரமைப்பு தேவையில்லை.
ஃபேஸ் ஃப்ரேமிங் ஹயிலைட்ஸ்
ஃபேஸ்-ஃப்ரேமிங் ஹயிலைட்ஸ் உங்களுக்கு அதிக மெருகேற்றிய தோற்றத்தைக் கொடுக்கும். உங்களுடைய முடி நிறத்தின் சரியான கலவையைத் தேர்ந்தெடுங்கள். பொன்னிறத்துடன் இயற்கையான கருப்பு போன்ற வெளிர் நிறங்கள் அல்லது வெளிர் ப்ரவுன் மற்றும் பொன்னிறம் போன்ற ஷேடுகள் உங்கள் அடர் ப்ரவுன் நிற முடிக்கு சரியான தேர்வாக இருக்கும். இது உங்கள் முகத்தைப் பிரகாசமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்டல்
இந்த பண்டிகை காலங்களில், தயங்காமல் பேஸ்டல் ஷேடுகளை முயற்சி செய்து பார்க்கலாம். மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க விரும்புவோர், நிச்சயம் இளஞ்சிவப்பு மற்றும் ஆர்க்கிட் ஷேடுகளை முயற்சி செய்யலாம்.
இயற்கை வண்ணங்கள்
க்ரே, புகைஸ்மோக்கி வண்ணங்கள் இப்போது வந்துவிட்டன. இது புதிய மற்றும் இயற்கையான முடி நிற தோற்றத்தைத் தருகிறது. மேப்பிள், மஸ்டர்டு மற்றும் டெரகோட்டா ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வண்ணங்கள், நிச்சயம் உங்கள் தலைமுடிக்கு மிகவும் தேவையான அழகை சேர்கின்றன.
ஊதா
கத்திரிக்காய் தோலின் பளபளப்பான ஊதா-கருப்பு தொனி இயற்கையில் மிகவும் அழகிய வண்ணம். இந்த ஊதா நிறங்கள் டிரெண்டிங் மட்டுமல்ல, உங்கள் அழகை மாற்றுவதற்கான சரியான வழியும்கூட. அதன் அனைத்து ஷேடுகளிலும் ஒரு போல்ட் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் தெரியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil