What type of mask should wear for covid 19 cdc Tamil News : வேகமாகப் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில், சுகாதார வல்லுநர்கள் சிறந்த பாதுகாப்பிற்காகத் திருத்தப்பட்ட COVID-19 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். துணி மாஸ்க் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று நிபுணர்கள் கண்டறியப்பட்ட பிறகு, அதற்கு பதிலாக இரட்டை மாஸ்க் அணிய இப்போது பரிந்துரைக்கிறார்கள்.
தாடி கொண்டிருப்பவர்களுக்கு சில வகையான மாஸ்குகள் சரியாகப் பொருத்துவதற்குக் கடினமாக இருக்கும். முகத்தை ஒட்டியிருக்கும் தாடியை ஷேவிங் அல்லது டிரிம் செய்து, சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்ய, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) பரிந்துரைத்துள்ளது.
நீங்கள் அணிய வேண்டிய மாஸ்க் வகை குறித்து சி.டி.சி வேறு சில வழிகாட்டுதல்களையும் வகுத்துள்ளது.
கீழ்வரும் வழிகாட்டுதலின்படி நீங்கள் மாஸ்குகளை தேர்வு செய்ய வேண்டும்:
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட துவைக்கக்கூடிய, சுவாசிக்கக்கூடிய துணி வகையுடனான மாஸ்க் அவசியம்
* உங்கள் மூக்கு மற்றும் வாயை முழுமையாக மூடவேண்டும்
* உங்கள் முகத்தின் பக்கங்களுக்கு ஏற்றபடி இடைவெளிகள் எதுவுமில்லாமல் மெதுவாகப் பொருத்தவும்.
* மாஸ்க்கின் மேற்புறத்திலிருந்து காற்று வெளியேறுவதைத் தடுக்க nose wire வைத்துக்கொள்ளுங்கள்.
சி.டி.சி படி, நீங்கள் இதுபோன்று மாஸ்குகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்:
* சுவாசிக்கக் கடினமாக உள்ள வினைல் போன்ற துணியால் ஆன மாஸ்குகள்
* வைரஸ் துகள்கள் தப்பிக்க அனுமதிக்கும், வெளியேற்ற வால்வுகள் அல்லது துவாரங்கள் கொண்ட மாஸ்குகள்
முகக் கவசங்களைப் பொறுத்தவரை, சி.டி.சி மதிப்பீடு செய்யப்படாவிட்டாலும் அவற்றின் “செயல்திறன் இந்த நேரத்தில் தெரியவில்லை” என்பதால் அவை பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறுகிறது. அதற்கு பதிலாக, நீங்கள் இரண்டு அடுக்குகளுடன் ஒரு கெய்டரை அணியலாம் அல்லது இரண்டு அடுக்குகளை உருவாக்க அதனை மடிக்கலாம்.
குழந்தைகளுக்கான மாஸ்குகள்
குழந்தைகள் குறிப்பாக அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மாஸ்குகளை அணிய வேண்டும். மூக்கு, வாய் மற்றும் கன்னத்தின் கீழ் மெதுவாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் இரண்டு பக்கங்களிலும் எந்த இடைவெளிகளும் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் சரிபாருங்கள். இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகள் மாஸ்க் அணியக்கூடாது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil