பல இந்திய திருமணங்களில் 'ஹல்தி' சடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து மணமகள், மணமகன் மீது மஞ்சள் பூசும் நிகழ்வை 'ஹல்தி' எனக் கூறுவோம். இதற்கான காரணம் குறித்து நாம் பல நேரங்களில் சிந்தித்திருப்போம். தற்போது அதற்கான விளக்கத்தை பிரபல ஜோதிடர் பண்டிட் ஜெகநாத் குருஜி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What is so special about ‘haldi’ and why is it used in Indian weddings?
இந்து திருமணங்களில் 'ஹல்தி' என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஆயுர்வேதத்தின் பயன்பாடுகளையும் உள்ளடக்கியதாக கூறுகின்றனர். அதனடிப்படையில், "இந்துக்களின் மரபின் படி மஞ்சளின் நிறம் புனிதத்தையும், அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. இது தம்பதியின் திருமண வாழ்வில் அமைதியையும், செழிப்பையும் தருகிறது. 'ஹல்தி' சடங்கின் மூலம் தீய சக்திகளை நெருங்கவிடாமல் செய்ய முடியும். மணமகன் மற்றும் மணமகளை எதிர்மறை ஆற்றலில் இருந்து மஞ்சள் காக்கிறது" பண்டிட் ஜெகநாத் குருஜி கூறுகிறார்.
மணமக்களின் சருமத்தில் எதற்காக மஞ்சள் பூசப்படுகிறது?
மஞ்சள் ஒரு அழகு சாதன பொருளாக கருதப்படுகிறது. இது சருமத்தை பளபளப்பாக மாற்றி பொலிவை கொடுக்கும். திருமண நிகழ்வின் போது அழகாக காட்சியளிக்க வேண்டும் என மணமகளும், மணமகனும் நினைப்பார்கள். இதற்கு மஞ்சள் உதவி செய்கிறது. இந்நிகழ்விற்கு மேலும் சில காரணங்களும் கூறப்படுகிறது. மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற மூலப்பொருள், மன அழுத்தத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. எனவே, இது திருமணத்திற்கு முன்னதாக ஏற்படும் பதற்றத்தை குறைக்கிறது என நம்பப்படுகிறது.
"வேதங்களின்படி 'ஹல்தி' சடங்கு, உடலையும், ஆன்மாவையும் சுத்தப்படுத்துகிறது. இந்த சடங்கு மணமகனும், மணமகளும் புனிதமான திருமணத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவர்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் தூய்மைப்படுத்தும் ஒரு நல்ல தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும், ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தை இது குறிக்கிறது" என பண்டிட் ஜெகநாத் குருஜி தெரிவித்துள்ளார்.