கண் எதிராக ஒருவருக்கு, மாரடைப்பு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் நாம் செய்யும் முதல் உதவி ஒருவரின் உயிரை காப்பாற்றும்.
இந்நிலையில் அவர் முழுவதுமாக மயங்கிவிட்டாரா என்பதை பார்க்க வேண்டும். நாடித்துடிப்பு மற்றும் மூச்சுவிடும் தன்மையை பார்க்க வேண்டும். மயக்க நிலையை அடைந்திவிட்டார்களா என்பதை பார்க்க வேண்டும்.
இதயத்தில் மூச்சுவிடுவதில் சிக்கல், சீரில்லாத இதயத் துடிப்பு இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏ.இ.டி ( AED ) என்பது விமானநிலையம், ஷாப்பிப் மால் போன்ற பொது இடங்களில் இருக்கும். இந்நிலையில் இதை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு குரல் பதிவி இதில் இருக்கும்.
உடனடியாக உதவுவதற்கு யாரையாவது அழைக்க வேண்டும். நீங்கள் சி.பி.ஆர் செய்ய பயிற்சி பெற்றிருந்தால், 30 செஸ்ட் கம்பிரஷன் குறிப்பாக 100-120 ரேட்டில் செய்ய வேண்டும்.
இதில் உங்களுக்கு அனுபவம் இல்லை என்றால் தொடர்ந்து இதயத்தை அழுத்துகொண்டே இருக்கவும். இந்நிலையில் வெளியே ஏதேனும் காயங்கள் மற்றும் ரத்த கசிவு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“