மஞ்சள் காமாலை முதல் கல்லீரல் பாதிப்பு வரை: நகங்கள் காட்டும் நோயின் அறிகுறிகள்!

நம்மில் பலர் நகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சில சமயங்களில் நகங்களின் நிறம் அல்லது தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள், நமது உடல்நலத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தரலாம்.

நம்மில் பலர் நகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சில சமயங்களில் நகங்களின் நிறம் அல்லது தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள், நமது உடல்நலத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தரலாம்.

author-image
WebDesk
New Update
Nail color changes

மஞ்சள் காமாலை முதல் கல்லீரல் பாதிப்பு வரை: நகங்கள் காட்டும் நோயின் அறிகுறிகள்!

நம்மில் பலர் நகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சில சமயங்களில் நகங்களின் நிறம் அல்லது தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள், நமது உடல்நலத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தரலாம். நகத்தில் மேட்ரிக்ஸ் மற்றும் நெயில் ரூட் என 2 முக்கிய பகுதிகள் உள்ளன. இதில் மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் வளர்ச்சிக்குக் காரணமான இதயப் பகுதியாகும்.

உங்கள் நகங்கள் ஏன் நிறம் மாறுகின்றன?

Advertisment

நகங்கள் வித்தியாசமான நிறத்தில் காட்சியளிப்பது இயல்பானதாக இருந்தாலும், சில நேரங்களில் அது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு இயற்கையாகவே அவர்களின் நகங்கள் மற்றவர்களை விட வேறு நிறத்தில் இருக்கலாம். அப்படி இருந்தால் பயப்படத் தேவையில்லை, ஒருமுறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஆனால், கீழ்க்காணும் மாற்றங்கள் ஏற்பட்டால் கவனமாக இருங்கள்:

உங்கள் நகங்கள் சொல்லும் உடல்நலக் கோளாறுகள்:

மஞ்சள் நிறக் கோடுகள்: உங்கள் நகங்களில் மஞ்சள் நிறக் கோடுகள் இருந்தால், அது புகைபிடிப்பதால் ஏற்பட்ட நிக்கோடின் கறையாக இருக்கலாம். இது சாதாரணமாகப் போயிருக்கலாம். ஆனால், நீளமான, மங்கலான மஞ்சள் கோடுகள் தென்பட்டால், அது மூட்டுவலி அல்லது நுரையீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். இது உடனடியாக மருத்துவக் கவனம் தேவைப்படும் நிலை.

வெள்ளை நிறக் கோடுகள், திட்டுக்கள்: நகங்களில் கோடுகள் போன்ற வெண் திட்டுகள் காணப்பட்டால், அது உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதையும், புரதம் மற்றும் துத்தநாகச் சத்து குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டலாம். உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை என்பதைக் காட்டுகிறது.

Advertisment
Advertisements

மஞ்சள் நிற நகங்கள்: பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதே ஆரோக்கியமானது. ஆனால், உங்கள் நகங்கள் முழுவதும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம். வெள்ளை நிற நகங்கள்: உங்கள் எல்லா நகங்களும் வெண்மை நிறத்தில் காட்சியளித்தால், அது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும். கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு என்பதால், இதை உடனே கவனிக்க வேண்டும். 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

உங்கள் நகங்களில் ஏதேனும் அசாதாரணமான அல்லது தொடர்ச்சியான நிற மாற்றங்கள் அல்லது தோற்ற மாற்றங்கள் தோன்றினால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். உடனடியாக ஒரு தோல் மருத்துவர் அல்லது பொது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது பல பெரிய உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: