Whats in Bigg Boss Archana Phone Tamil News : எப்போதும் தன் யூடியூப் பக்கத்தில் பல சுவாரசிய கன்டென்ட்டுகளை பகிர்ந்துவரும் பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, சமீபத்தில் தான் தினமும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். மனிதன் 24 மணிநேரத்தில் சராசரியாக 6-7 மணிநேரம் தூங்குவதற்கு, பல் துலக்குவது, குளிப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்களுக்கு 1.30 மணிநேரமும்தான் செலவு செய்கிறார்கள்.
Advertisment
ஆனால், எந்த வேலைக்குச் செல்பவராக இருந்தாலும், குறைந்தது 4-4.5 மணிநேரம் தங்களுடைய மொபைலில்தான் செலவு செய்கிறார்கள் என்கிற குறிப்போடு இந்த காணொளியைத் தொடங்கினார் அர்ச்சனா. அதிலும், தன்னுடைய உடல்நிலை சரியில்லாதபோதிலும், 3.30 மணிநேரம் போனில் செலவு செய்திருக்கிறாராம். அப்படி என்னதான் அவருடைய போனில் இருக்கிறது?
"என் போனில் நான் பயன்படுத்தும் செயலிகள், அடிக்கடி தொடர்புகொள்ளும் என்னுடைய மக்கள் மற்றும் என் கேலரியில் உள்ள புகைப்படங்கள், காணொளிகள் என நான் பார்த்து சந்தோஷப்படும் விஷயங்கள் என்ன என்றுதான் இந்த காணொளியில் பார்க்கப்போகிறோம். அந்த வரிசையில் என்னுடைய ஃபேவரைட் லிஸ்ட்டில் நாம் முதலில் பார்க்கப்போவது யாருக்கெல்லாம் நான் அடிக்கடி தொடர்பு கொள்வேன் என்பதுதான்.
Advertisment
Advertisements
அதில் முதல் இடம் என் அம்மாவுக்குதான். அவருக்கு ஒருநாளில் எத்தனை முறை அழைப்பேன் என்பது எனக்கே தெரியாது. சும்மா போன் செய்து இங்கே இருக்கேன், சுடுதண்ணீர் வெச்சாச்சா, ரெடியா இருக்கீங்களா? எனக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அடுத்ததாக என் கணவர் வினீத். எங்களுக்குள் பொதுவான டிஸ்கஷன்தான் பெரும்பாலும் இருக்கும். எப்போதாவது லவ் யூ சொல்ல போன் செய்வேன் அவ்வளவுதான்.
அடுத்ததாகத் தங்கை ஆன் மற்றும் அவளுடைய கணவர் அர்ஜுன். பிறகு ஜாரா. என் மகளைப் பொறுத்தவரை, அவளை அதிகமாக தொலைபேசி உபயோகிக்க விடமாட்டேன். பெரும்பாலும் வீட்டு போனுக்கு தொடர்புகொண்டுதான் அவளிடம் பேசுவேன். அதிலும் இப்போது என்கூடவே இருக்கிறாள் என்பதால் அந்த அழைப்பும் குறைந்துவிட்டது". பிறகு, அருள் அண்ணன், ஷிவா, தொணதொணவென பேசும் தன்னுடைய சித்தி என இவருடைய லிஸ்ட் கொஞ்சம் நீண்டது.
இதனைத் தொடர்ந்து, தான் அடிக்கடி உபயோகிக்கும் செயலிகளின் பட்டியலைத் தொகுத்தார். அதில் முதலாவது லாக்டவுனில் அடிக்கடி பயன்படுத்திய ஷாப்பிங் செயலிகள். பிறகு, ஆரோக்ய சேது, ஜோமேட்டோ, ஸ்விக்கி, இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக், புத்தக ஆப், பேங்கிங் செயலி, அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், வூட் என நம்மிடம் இருக்கும் அதே செயலிகள்தான் இருந்தன.
இறுதியாக தன்னுடைய கேலரிக்குச் சென்று, அதில் சில புகைப்படங்களைக் காண்பித்தார். "ஜாராவுக்கு புகைப்படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்கும். அவளைப் பொறுத்தவரை எந்த மொமென்ட்டுகளையும் மிஸ் செய்துவிடக்கூடாது என்பதில் குறிப்பாக இருப்பாள். இறுதியாக இந்த போனில் எது இருந்தாலும் இல்லையென்றாலும் நிச்சயம் மியூசிக் மற்றும் புகைப்படங்கள் இருந்தாகவேண்டும். நான் சோர்வாக இருக்கும் சமயங்களில் இது இரண்டும்தான் என்னை மீட்கும்" என்பதோடு நிறைவு செய்கிறார் அர்ச்சனா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil