வாட்ஸ்அப் உங்கள் நண்பன் – இந்த அம்சங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால்

Whatsapp Features: தற்போது  வாட்ஸ்அப்பில் இருக்கும் சில அம்சங்களை இங்கே காணலாம். ஆகையால், நீங்கள் வாட்ஸ்அப் பில்  உங்கள் பாதுகாப்பையும், பயன்பாட்டையும் உறுதி செய்யலாம்

WhatsApp, WhatsApp Pay, whatsapp features , Whatsapp privacy ,Whatsapp readhide receipts , Whatsapp Data limit ,Whatsapp pay
WhatsApp, WhatsApp Pay, whatsapp features , Whatsapp privacy ,Whatsapp readhide receipts , Whatsapp Data limit ,Whatsapp pay

வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் வாட்ஸ்அப்பில் ‘டார்க் மோட்’ மற்றும் ‘கைரேகை திறத்தல்’ போன்ற அம்சங்களை பயன்படுத்த போகிறார்கள் . தற்போது  வாட்ஸ்அப்பில் இருக்கும் சில அம்சங்களை இங்கே காணலாம். ஆகையால், நீங்கள் வாட்ஸ்அப் பில்  உங்கள் பாதுகாப்பையும், பயன்பாட்டையும் உறுதி செய்யலாம்

வாட்ஸ்அப் பே: தற்போது பீட்டாவில் இயங்கி வரும் வாட்ஸ்அப் பே(WhatsApp Pay)  யின் , அதிகாரப்பூர்வ வெளியீடு இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பே என்பது யுபிஐ அடிப்படையிலான கட்டண அமைப்மாகும்.  பயனர்கள் வாட்ஸ்அப் சேட்டில் இருந்து தங்கள் பண பரிவதனையை இனி செய்யலாம். கிட்டத்தட்ட தற்போது இருக்கும் கூகிள் பே வைப் போன்றதாகும்.

வாட்ஸ்அப் குரூப்: வாட்ஸ்அப் பின் பெரிய பலமும், பலவீனமும் இந்த குரூப் அம்சங்கள் தான். நம்மை யார் வேணுமானாலும் வாட்ஸ்அப்-பில்   அவர்களின் குரூப்களில் சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால், இதை தடுக்கவும் தற்போது வாட்ஸ்அப் பில் சில அம்சங்கள் வந்துவிட்டன. உதரணமாக, அக்கவுன்ட்> தனியுரிமை> குரூப்ஸ் சென்று “எவ்ரிபடி” என்பதை “நோபடி” என்பதை மாற்றியமைத்தால் இனி உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை மற்ற குரூப்களில் சேர்க்கமுடியாது.

நான் வாசித்ததை மறை: வாட்ஸ்அப் பில்  பிறர் உங்கள் உங்களுக்கு தகவல்கள் அனுப்பியதை நீங்கள் படித்தவுடன் இரண்டு ப்ளூ டிக்குகள் காட்டும் . ஆனால், இவ்வாறு காட்டமால் இருக்கவும் நீங்கள் செய்யலாம். அக்கவுன்ட்> தனியுரிமை> ரீட் ரெசிப்ட்ஸ் ஆப் செய்து விடுங்கள்.

டெலிட் ஃபார் எவ்ரிஒன்: நீங்கள் தவறுதலாய் யாருக்கேனும் தகவல் அனுப்பிவிட்டால், உடனடியாக அந்த தகவலை அழுத்தி அமுக்குங்கள். டெலிட் ஃபார் எவ்ரிஒன்,டெலிட் ஃபார் மீ என்று கேட்கும்.  டெலிட் ஃபார் எவ்ரிஒன் என்று கொடுத்து விட்டால் நீங்கள் அனுப்பிய தகவலை நீங்கள் அனுப்பிய நபர்களும் படிக்க முடியாது.

டேட்டா லிமிட்:  நீங்கள் உங்களிடம் இருக்கும் ஒரு ஜி.பி யை எவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்துவது என்று யோசனை செய்பவரா- பின், செட்டிங்க்ஸ்> டேட்டா மற்றும் சேமிப்பக பயன்பாடு சென்று உங்கள் எவ்வாறு டேட்டா பயன்படுத்துவது என்று கன்ட்ரோல் செய்யுங்கள்.  உதரணமாக, மொபைல் டேட்டா செயல்பாட்டில் இருக்கும்  போது ஆடியோ,வீடியோ தானாக டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று மாற்றிவிடுங்கள்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp features whatsapp pay read hide receipts data limit wahtsapp privacy

Next Story
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்திய கோயில்கள் – தெரிந்து கொள்வோம்Temples in India - List of Famous temple in India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com