இப்படி கோதுமை தோசை செய்யுங்க. ருசி ரொம்பவே சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு : 2 கப்
ரவை : 2 டீஸ் பூன்
உப்பு
பெருங்காயத்தூள்
தண்ணீர் : 2 அரை கப்
வெங்காயம்
சீரகம்
கேரட் : அரை கப்
முட்டை கோஸ் : அரை கப்
குடை மிளகாய்
வெங்காயம்
சாம்பார் பொடி: அரை டீஸ்பூன்
செய்முறை: கோதுமை மாவு, ரவை, உப்பு, வெந்தயம் ஆகியவற்றை தண்னீர் சேர்த்து கரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை 20 நிமிடங்கள் ஆப்படியே விட்டுவிடுங்கள். தொடர்ந்து முட்டை கோஸ், வெங்காயம், குடை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை மிகவும் சிறிதாக நறுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து காய்கறிகளை வதக்க வேண்டும். தொடர்ந்து அதில சாம்பார் பொடியை தூவ வேண்டும். தொடர்ந்து வதக்க வேண்டும். இந்நிலையில் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்றாக கலந்து தவாவில் தோசை போல் ஊற்றி எடுக்க வேண்டும்.