Wheat Dosa Recipe, Wheat Dosa Tamil Video: எளிய மக்கள் இல்லங்களிலும் இன்று கோதுமை முக்கிய உணவுப் பொருள். உபயம், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச கோதுமை. இந்த கோதுமையை மாவாக திரித்து வைத்துக் கொண்டால், நினைத்த நேரத்தில் பூரி, சப்பாத்தி என அசத்தலாம்.
Advertisment
பூரி, சப்பாத்தி ஆகியவற்றுக்கு மாவை பிசைவது, உருண்டைகளாக உருட்டுவது என சில வேலைகள் இருக்கின்றன. ஆனால் கோதுமை மாவை சிம்பிளாக பயன்படுத்த வழி செய்வது தோசை. ஆனால் சப்பாத்தி, பூரியில் பழகிய பலருக்கு கோதுமை தோசை பிடிப்பதில்லை. செய்ய வேண்டிய முறையில் செய்தால், கோதுமை தோசையும் சுவையான உணவே.
கோதுமை தோசைக்கான இந்த ரெசிபியில், முக்கியத்துவம் பெறுவது தயிர்தான். கோதுமை தோசையை மிருதுவாக்கி, அதன் டேஸ்டையே உங்களுக்கு விருப்பமான வகையில் மாற்றிக் கொடுப்பது அதுவே! எப்படி தயிர் சேர்த்து கோதுமை தோசை தயார் செய்வது? என இங்கே பார்க்கலாம்.
Wheat Dosa Tamil Video: கோதுமை தோசை
Advertisment
Advertisements
கோதுமை தோசை செய்யத் தேவையான பொருட்கள்: ஒரு கப் முழு கோதுமை மாவு, ஒரு வெங்காயம் ( நறுக்கியது), இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு பச்சை மிளகாய் நறுக்கியது, கருவேப்பிலை சிறிதளவு நறுக்கியது, தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய்
கோதுமை தோசை செய்முறை:
முதலில் கோதுமை மாவுடன் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு உப்பு சேர்த்து, மாவை ஓரிரு மணி நேரங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும், தேவையென்றால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வழக்கம்போல தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வழக்கமான தோசை ஊற்றுவது போல் ஊற்றவும். இப்படி சுட்டு எடுத்தால், தயிர் மிக்ஸான சுவையான மொறு மொறு கோதுமை தோசை ரெடி. தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சாப்பிட்டால், இந்த கோதுமை தோசை சூப்பராக இருக்கும்.
கோதுமையில் நார்சத்து அதிகம் இருப்பதால், உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் கோதுமை உணவு பரிந்துரை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"