ஒரு முறை இப்படி கப் கேக்-யை கோதுமைமாவில் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 முட்டை
கால் கப் பட்டர்
அரை கப் பிரவுன் சுகர்
1/3 கப் பால்
அரை டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
1 கப் கோதுமை மாவு
அரை கப் பேக்கிங்க பவுடர்
கால் கப் பேக்கிங்க சோடா
கொஞ்சம் உப்பு
காய்ந்த மாம்பழ துண்டுகள்
காய்ந்த அன்னாச்சி பழ துண்டுகள்
செய்முறை : ஒரு மிக்ஸியில் முட்டை, பட்டர், பிரவுன் சுகர், பால் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர்,, உப்பு சேர்த்து சலிக்கவும். தொடர்ந்து அந்த மாவில், முட்டையை கலவையை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து இதில் காய்ந்த மாம்பழ துண்டுகள், காய்ந்த அன்னாச்சி பழ துண்டுகளை சேர்த்து கிளரவும். இந்த மாவை சிறு கிண்ணங்களில், சேர்க்கவும். பெரிய பாத்திரத்தில் ஸ்டாண்டு போல் வைத்து அதற்கு மேல் கிண்ணங்களை வைக்கவும். மூடி போட்டு 25 நிமிடங்கள் வேக வைத்தால் கேக் ரெடி.