செம்ம சுவையான கோதுமை அல்வா. இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் (வண்ணத்திற்காக சிறிது), நெய் - 75 கிராம், எண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் சிறிது, வறுத்த முந்திரி தேவையான அளவு, வெள்ளரி விதை ஒரு டீஸ்பூன்
செய்முறை: நெய்யையும், எண்ணெயையும் ஒன்றுசேர்த்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு புறம் கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு மாதிரி கரைத்துக் கொள்ளவும். ஏற்கனவே தனியாக எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையில் அரை கப் நீர் விட்டு கரைத்து கொதிக்க வைக்கவும். அது நுரையாக பொங்கி வரும்போது, கரைத்த கோதுமை மாவை சேர்த்து கைபடாமல் கிளறவும்.
பிறகு நெய் - எண்ணெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி விடுங்கள். பின்னர் ஏலக்காய் தூளை சேருங்கள். அதன்பிறகு நெய் தடவிய தட்டில் கொட்டி, அதற்கு மேல் வறுத்த முந்திரி மற்றும் வெள்ளரி விதையை தேவைக்கு ஏற்ப தூவுங்கள். ஓரளவு சூடு குறைந்ததும், துண்டுகளாக வெட்டினால் சுவையான கோதுமை அல்வா தயார்!