ஒரு முறை வீட்டில் இப்படி நூடுல்ஸ் செய்து பாருங்க. செய்வது ஈசிதான்.
தேவையான பொருட்கள்
1 ½ கப் கோதுமை மாவு
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு
1 ஸ்பூன் எண்ணெய்
4 டம்ளர் தண்ணீர்
4 ஸ்பூன் எண்ணெய்
8 பூண்டு
1 துண்டு இஞ்சி
2 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் சர்க்கரை
1 ½ ஸ்பூன் சோயா சாஸ்
1 வெங்காயம் நறுக்கியது
1 துருவிய கேரட்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து ஊற வைக்கவும். தொடர்ந்து அரை மணி நேரம் கழித்து இடியாப்ப அஞ்சில், இதை போட்டு பிழிய வேண்டும். பெரிய ஓட்டைகள் உள்ள அச்சை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து பிழிந்த மாவை வெண்ணீரில் கொதிக்க வைக்கவும். 9 நிமிடங்கள் கொதித்த பின்பு அதை வடிகட்டி, சாதாரண தண்ணீரில் சேர்க்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேரட் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் மிளகாய் பொடி, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் நூடுல்ஸை சேர்க்கவும். இதை கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“