ஆவணி அவிட்டம் ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படுகிறது. மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்டுக் கொடுத்த நாள் ஆவணி அவிட்டம் என்று பெயர் வைத்து கூறப்படுகிறது.
ஆவணி அவிட்ட நாளில் பூணூல் மாற்றும் நிகழ்வு செய்வது சிறப்பு. அது மட்டுமல்லாமல் உபகர்மா என்று கூறப்படும் பிராமணர் சமூகத்தில் கல்வி கற்க தொடங்கும் நாளாகவும் இது சிறப்பிக்கப்படுகிறது.
பூணூல் அணியும் வழக்கம் உள்ளவர்கள் ஆவணி அவிட்ட நாளில் அதிகாலையில் எழுந்து நீர்நிலைகளில் குளித்து நீராடி அருகில் உள்ள கோயில் சென்று புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வர்.
தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்த நாள் பெரும்பாலும் பௌர்ணமியன்று வரும். இந்த நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடடப்பகிறது.
இந்தாண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19-ம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அதிகாலை 4.32 மணி முதல் 5.20 வரை பிரம்ம முகூர்த்தம் நேரம் மற்றும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை நல்ல நேரமாகும், இந்த நேரத்தில் பூணூல் மாற்றி கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“