அதிகரிக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் மற்றும் மாறுபட்ட குடும்ப கட்டமைப்புகள் காரணமாக இன்று மக்கள் இயற்கை இனபெருக்க முறைகளை தவிர்த்து வேறு முறைகளை தேடிசெல்ல துவங்கியுள்ளனர். அறிவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக இன்று ஆர்வமிகுதியான பெற்றோர் குறிப்பாக ஒற்றை பெற்றோர் (single parents) மற்றும் ஒரே பாலினத்தை சேர்ந்த தம்பதியர் கூட மாற்று தொழில்நுட்ப முறைகளான சோதனைகுழாய் கருத்தரித்தல் அல்லது வாடகைத்தாய் மூலம் கருத்தரிக்க முடிகிறது.
Advertisment
பொதுவாக தான் எவ்வாறு கருவாக உருவானேன் அல்லது எப்படி குடும்பத்துக்குள் கொண்டுவரப்பட்டேன் என்பதை குழந்தைகளிடம் பெற்றோர் பொருத்தமான வயதில் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டிற்கு குழந்தை தத்து எடுக்கப்பட்டு இருந்தால், அவர்கள் தத்து எடுக்கப்பட்டவர்கள் என்பதை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தை சோதனை குழாய் மூலமோ அல்லது வாடகை தாய் மூலமோ பிறந்திருந்தாலும் அவர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சோதனைக் குழாய் அல்லது வாடகைத்தாய் குறித்து குழந்தைகளிடம் எவ்வாறு பேசுவது?
Advertisment
Advertisements
தாங்கள் எவ்வாறு உருவானோம் என்பதை குழந்தைகளிடம் எப்படி கூறுவது என்பது ஒரு முடிவில்லா விவாதப் பொருள். இந்த விஷயம் குறித்து பெற்றோர் குழந்தைகளிடம் மிக இளம் பருவத்திலேயே பேச துவங்க வேண்டும். நீங்கள் திரும்ப திரும்ப இந்த விஷயத்தை பற்றி பேசும் பொழுது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இந்த விஷயம் மிக சாதாரணமாக மாறிவிடும். வாடகைத்தாய் அல்லது சோதனை குழாய் என்பது முற்றிலும் சாதாரணமான நிகழ்வு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள இது அவர்களை ஊக்குவிக்கும்.
குழந்தைகள் வளரும் போது அவர்களது தோற்றம் பற்றி அவர்களுக்கு கேள்விகள் இருக்கலாம். எடுத்துகாட்டாக வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது தோற்றத்தில் சிறிய வித்தியாசம் இருக்கலாம். எனவே அடையாள வளர்ச்சியில் குழந்தைக்கு சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குழந்தை குடும்பத்துக்குள் எவ்வாறு வந்தனர் என்பது பற்றி அவர்கள் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
குழந்தைகள் எவ்வாறு பிறந்தனர் என்பதை அவர்களிடம் சொல்வதோடு மட்டுமல்லாமல் பெற்றோர் அவர்கள் குழந்தைகளின் மீதான பாசத்தை மீண்டும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.