வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், நாம் சில உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதுபோல சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக வெயில் இருக்கும்போது மயக்கம், சோர்வு, வயிற்று பிரச்சனை, ஹீட் ஸ்டோக் ஏற்படலாம். இந்நிலையில் நமக்கு தேவையான ஓ.ஆர்.எஸ் எடுத்துகொள்ள வேண்டும்.
மதுபானம், டீ, காப்பி, சாப்ட் டிரிங்ஸ், அதிக சர்க்க்ரை சேர்த்த பானங்கள் எடுத்துகொள்ள கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாம் அதிகம் புரத சத்து உள்ள உணவுகளை எடுத்துகொள்ளும்போது, அது செரிமானம் ஆக அதிக நேரம் தேவைப்படும். இந்நிலையில் அதிக புரத சத்து உணவுகளை சாப்பிடும்போது, அதை செரிமானம் ஆக்க அதிக தண்ணீர் செலவாகும், என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் நாம் அதிக பழங்கள், காய்கறிகளை எடுத்துகொள்ள வேண்டும். ப்ரூட் சர்பத், மோர், இளநீர், கோகம் பழ தண்ணீர் ஆகியவற்றை நாம் குடிக்க வேண்டும். இவை நமது உடலுக்கு இழந்த எலக்ட்ரோலைட்டை நமக்கு தருகிறது.
ஹாட் வாட்டர் பேகில், நாம் குளிர்ந்த தண்ணீரை நிறைத்து அதை,முட்டிகளுக்கு அடியில் வைக்கலாம். நாம் சாப்பிட்ட பிறகு புதினா இலைகளை நாம் சாப்பிடலாம். தண்ணீரில் புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம். கார்டன் துணிகளை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும் குறைந்த எடை மற்றும் கனமாக இல்லாத ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.