குடிப்பழக்கம் கல்லீரல், கணையம், இரைப்பை போன்றவற்றை பாதிக்கும் என்று தான் பலர் கூறியிருப்பார்கள். ஆனால் மது அருந்துவதால் மூளையையும் தாண்டி மற்றொரு உறுப்பும் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர் சொக்கலிங்கம் டாக்டர் இண்டர்வியூ யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
அதாவது மது குடிப்பவர்களுக்கு மூளையை தாண்டி இதயமும் பாதிக்கப்படும் என்கிறார் டாக்டர். மது குடிப்பவரக்ளுக்கு ரத்த கொதிப்பு அதிகமாகும். இதனால் இதய துடிப்பும் அதிகமாகும்.
குடிகாரர்கள் பார்க்க சாதரணமக இருந்தாலும் அவர்கள் பாதிப்புக்குள்ளனவர்கள் தான். ஏனென்றால் மது குடிக்கும் போது ரத்த கொதிப்பு அதிகரித்து ரத்த குழாய் விரிவடையும் என்கிறார்.
மது குடித்தால் இப்படி நடக்குமா? | மிரள வைக்கும் தகவல் | Dr Chockalingam interview | Doctor Interview
இதனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும். கார்டியாக் தசைகளில் அறிப்பு ஏற்பட்டு இதயம் பெரிதாகி செயல் இழக்கும். ஒரே அடியாக இவை நிகழவில்லை என்றாலும் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே மது குடிப்பது மூளை மற்றும் மற்ற உடல் உறுப்புகளை தாண்டி இதயத்தை அதிகம் பாதிக்கும் என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.