/indian-express-tamil/media/media_files/2025/04/08/TFKAhnlKjCahnyzSRlHf.jpg)
கோடை வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களில் அதன் தீவிரத்தை காண்பிக்கத் தொடங்கி விட்டது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்போது, பெரும்பாலானவர்கள் வீட்டில் ஏ.சி பயன்படுத்துகின்றனர். அதிலும் கோடை காலம் வந்தால் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும். ஏ.சி உபயோகிப்பவர்களின் பெரும் கவலையாக இருப்பது கரண்ட் பில் தான். இந்தப் பதிவில் ஏ.சி பயன்படுத்தினாலும் கூட, கரண்ட் பில்லை குறைக்கும் வழிமுறைகள் குறித்து காண்போம்.
அந்த வகையில், ஏ.சி-யையும் பயன்படுத்த வேண்டும், கரண்ட் பில்லும் அதிகமாக இருக்க கூடாது என்றால் நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதற்காக ஒரு விஷயத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏ.சி-யில் இருக்கும் கம்ப்ரஸர் அதிகமாக ஓடுவதால் தான், கரண்ட் பில் அதிகரிக்கிறது.
பொதுவாக நாம் ஏ.சி-யை எந்த டெம்பரச்சரில் வைக்கிறோமோ, அதற்கு ஏற்ற வகையில் தான் கம்ப்ரஸர் ஓடும். அதன்படி, 17 அல்லது 18 போன்ற அளவில் டெம்பரச்சரை வைத்தால், அதற்கான பயன்பாட்டில் தான் கம்ப்ரஸர் இயங்கும். வீட்டில் இருக்கும் ஏ.சி டெம்பரச்சரை 17-ல் வைத்தாலும், 24-ல் வைத்தாலும் ஒரே அளவிலான குளிர்ச்சி தான் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் டெம்பரச்சரை 17 அல்லது 18 என்று வைப்பதால் தான் கம்ப்ரஸர் அதிகமாக ஓடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, ஏ.சி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நிபுணர்கள் வரை அனைவரும், ஏ.சி-யை 24 என்ற டெம்பரேச்சர் அளவில் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகின்றனர். இப்படி செய்யும் போது நம் உடலுக்கும் பாதிப்பு இருக்காது, கடண்ட் பில்லும் குறைவாக இருக்கும்.
நன்றி - Video Thagaval - வீடியோ தகவல் Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.