Advertisment

உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் எது?

முடிந்தவரை நல்ல பயிற்சியாளரிடம் உடற்பயிற்சிகளை கற்றறிந்து பிறகு நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

author-image
manigandan
புதுப்பிக்கப்பட்டது
New Update
gym 4 - unsplash

Athletic man exercising on exercise bike in a gym and talking to his female friend next to him.

இன்றைய காலகட்டத்தில் இரவுப் பணி செல்பவர்கள்தான் அதிகம்? அதிலும் shift மாறி மாறி வருபவர்களுக்கு எந்த மாதிரியான நேரத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு வரலாம்?

Advertisment

இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜிம் டிரைனர். இரவு நேரப் பணி என்றால் அவர்களின் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான். இதைப் பற்றி நான் கொஞ்சம் விரிவாக கூறினேன் என்றால் அவர்கள் வேலையையே விட்டுவிட்டு வந்து விடுவார்கள்.

அதனால், ரொம்ப விரிவாகப் பேசாமல் சில பயனுள்ள யோசனைகளை மட்டும் சொல்கிறேன்.
மனித உடம்பு அதன் லைஃப் ஸ்டைலுடன் ஒத்துப்போக அல்லது கிரகித்துக் கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்று பார்த்தால் 7 நாள்கள் முதல் 21 நாள்கள் வரைதான்.

ஆனால், இந்த நாள்களுக்குள் இரவு நேரப் பணி செய்பவர்கள் அடிக்கடி ஷிப்ட் மாறி மாறிச் சென்றிருப்பார்கள்.

இப்படி வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்துக்கு இரவு நேர ஷிப்டில் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், காலை நேரத்தில் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூக்கிவிடுங்கள்.

உறக்கம் கலைந்து விழித்ததும் அன்றைய பணிகளை முடித்துவிட்டு உங்கள் இரவு நேரப் பணிக்கு செல்ல ஆயத்தமாவதற்கு 3 மணி நேரம் முன்பு ஜிம்முக்குச் சென்று 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யுங்கள்.

அதன் பிறகு, வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்புங்கள்.
அதாவது அப்போது நீங்கள் சாப்பிடுவதுதான் break fast.

Break fast என்றால் சாப்பிடாமல் 7 மணி நேரம் இருக்கிறீர்கள் அல்லவா. அதன் பிறகு உங்கள் விரதத்தை (fast) முறிப்பதுதான் ஆங்கிலத்தில் break fast என்று கூறுவார்கள்.

இப்படி உங்கள் வேலை நேரத்துக்கு ஏற்றாற்போல் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

gym 6 - unsplash (1)

முடிந்தவரை முழு இரவு நேரப் பணியை தவிர்ப்பது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
தவிர்க்க முடியாத பட்சத்தில் 7 மணி நேரம் நன்கு தூங்குங்கள். ஜிம் செல்ல முடியாத சூழல் இருந்தால் வீட்டிலேயே தெரிந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதற்கு இப்போதெல்லாம் நல்ல ஆப்ஸ் இருக்கிறது.

தேவைப்பட்டால், வசதி இருந்தால் பிரத்யேகமாகப் பயிற்சியாளரையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டிற்கே வந்து உடற்பயிற்சிகளைக் கற்றுத் தருபவர்களும் இருக்கிறார்கள்.

ஜிம்முக்கு தொடர்ந்து செல்வதை பழக்கப்படுத்திக் கொள்வது எப்படி?

முடிந்தவரை நல்ல பயிற்சியாளரிடம் உடற்பயிற்சிகளை கற்றறிந்து பிறகு நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

எது எப்படியோ உங்கள் உடலுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அதில் மட்டுமே சமரசம் செய்ய வேண்டாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment