/indian-express-tamil/media/media_files/2025/05/26/Ghlo0jKec2eecqz46wH6.jpg)
How to remove stains from clothes
உங்கள் மனம் கவர்ந்த ஆடைகளில் மஞ்சள் கறையோ அல்லது பேனா மை கறையோ படிந்துவிட்டதா? அதற்காகக் கவலைப்பட்டு, அந்த ஆடையைப் பயன்படுத்த முடியாமல் ஒதுக்கி வைக்கிறீர்களா? இனி அந்தத் தேவை இல்லை!
உங்கள் ஆடைகளை மீண்டும் புத்தம் புதியதாக்கும் இரண்டு அற்புதமான வழிமுறைகளை இங்கே காணலாம்.
மஞ்சள் கறை நீங்க
நீங்கள் சாப்பிடும் போது உங்களுக்கு பிடித்த ஆடையில் பட்டு மஞ்சள் கறை படிந்து விட்டதா?
முதலில் டிஷ் சோப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலவையை மஞ்சள் கறையில் தடவவும். மெதுவாக தேய்க்கவும். வெதுவெதுப்பான நீரில் வாஷிங் பவுடர் சேர்த்து கறை படிந்த ஆடையை ஊற வைக்கவும். கறை படிந்த பகுதியை கைகளால் கசக்கி துவைத்து சுத்தமான நீரில் அலசவும். இப்போது மஞ்சள் கறை நீங்கி துணி புதிதாக இருக்கும். .
மை கறைகளை நீக்குதல்
பேனா மை கறைகள் ஆடைகளில் படிந்துவிட்டால், அவற்றை நீக்குவது கடினம் என்று பலர் நினைப்பார்கள். ஆனால், இந்த எளிய முறை மூலம் மை கறைகளையும் மாயமாக்கலாம்.
முதலில் மை கறையில் டூத் பேஸ்ட் தடவவும். அதன்மேல் கொஞ்சம் வினிகர் தடவவும். பிறகு சிறிது பேக்கிங் சோடா தூவி, அதன் மேல் மறுபடியும் கொஞ்சம் வினிகரைத் தடவவும். இப்போது ஒரு டூத் பிரஷ் பயன்படுத்தி கறையை மெதுவாக தேய்க்கவும். சோப்பு தண்ணீரில் ஆடையை கைகளால் கசக்கி துவைத்து சுத்தமான தண்ணீரில் அலசவும்.
இந்த எளிய முறைகளைப் பின்பற்றி, , உங்கள் ஆடைகளில் படிந்த கறைகளை எளிதாக நீக்கலாம். இனி கறைகள் உங்கள் மனதை தொந்தரவு செய்யாது, உங்கள் ஆடைகள் எப்போதும் புத்தம் புதியதாக மின்னும்! இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.