சூடான நீரில் இதை மட்டும் சேர்த்து பாருங்க… குழந்தைகளின் அழுக்கான வெள்ளை சாக்ஸ் பளிச்சென மாறும்!

கொதிக்கும் நீரில் எலுமிச்சை சாற்றைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் சாக்ஸ்களை மீண்டும் பளிச்சென்று ஜொலிக்க வைக்கலாம்.

கொதிக்கும் நீரில் எலுமிச்சை சாற்றைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் சாக்ஸ்களை மீண்டும் பளிச்சென்று ஜொலிக்க வைக்கலாம்.

author-image
WebDesk
New Update
White socks cleaning

White socks cleaning hacks (Image: Google)

குழந்தைகளின் சீருடை, அதிலும் குறிப்பாக வெள்ளை நிற ஆடைகளைத் துவைப்பது என்பது பல அம்மாக்களுக்கு ஒரு பெரிய சவால்தான். சட்டை, பேன்ட் என மற்ற ஆடைகளைவிட, வெள்ளைச் சாக்ஸ்களில் படிந்திருக்கும் அழுக்கைப் போக்குவது இன்னும் கடினம். எவ்வளவுதான் துவைத்தாலும், சில சமயங்களில் அந்த அழுக்கு முழுமையாக நீங்குவதில்லை. 
 
உங்கள் குழந்தையின் வெள்ளைச் சாக்ஸ் எவ்வளவு அழுக்காக இருந்தாலும், அதை மீண்டும் பளபளப்பாக மாற்ற ஒரு அருமையான வழி இருக்கிறது. 

Advertisment

வெள்ளை சாக்ஸ்களில் அதிக அழுக்கு இருக்கும் சமயங்களில், ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றைச் சேர்க்கவும். பிறகு, அந்த நீரில் சாக்ஸ்களை சுமார் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன்பின்னர், வழக்கம் போல் துவைத்தால், சாக்ஸ்களில் உள்ள அழுக்குகள் மிக எளிதாக நீங்கிவிடும். இந்த எளிய குறிப்பைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் வெள்ளை சாக்ஸ்களைப் புத்தம் புதியது போல் ஜொலிக்க வையுங்கள்!

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: