பற்கள் வெண்மையாக… தினமும் இரவில் இதை செய்யுங்க; டாக்டர் ராஜலெட்சுமி

பற்களை வெண்மையாக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. வீட்டிலேயே சில எளிதான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் பற்களை வெண்மையாக்கலாம். இதில் பற்களை வெண்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

பற்களை வெண்மையாக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. வீட்டிலேயே சில எளிதான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் பற்களை வெண்மையாக்கலாம். இதில் பற்களை வெண்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

author-image
WebDesk
New Update
Teeth Whitening Tips

அனைவரும் முத்து போன்ற வெண்மையான பற்கள் பெறவே விரும்புகின்றனர். இது அழகை கூட்டுவதுடன், ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்கிறது. நாம் ஒருவரை கவனிக்கும் போது, அவர்களின் பற்கள் நல்ல நிலையில் உள்ளதா (அ) அவை மஞ்சள் அல்லது மோசமாக, கருப்பாக உள்ளதா (அ) மஞ்சள் அல்லது கருப்பாக உள்ளதா என்பதைக் கவனிப்போம்.

Advertisment

ஒருவரின் வாய் ஆரோக்கியம் எவ்வளவு நல்லது/கெட்டது என்பது, அவர் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதைப் பற்றி எடுத்துரைக்கிறது. வெள்ளைப் பற்கள் மிகவும் விரும்பப்படுவதற்கு முக்கிய காரணம் அவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இதில் பற்களை வெண்மையாக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. வீட்டிலேயே சில எளிதான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் பற்களை வெண்மையாக்கலாம். இதில் பற்களை வெண்மையாக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

பற்களை வெண்மையாக்க உதவும் வீட்டு வைத்தியம்

பற்களை வெண்மையாக்க இந்த வீட்டு வைத்தியம் சிறந்த தேர்வாகும். தினந்தோறும் இதைச் சரியாக செய்து வருவதன் மூலம் சிறந்த முடிவுகளைப் பெறலாம். இதற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த முடிவுகளைப் பெற சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்துவது முக்கியமாகும். ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை வாயைச் சுற்றி 15-20 நிமிடங்கள் சுழற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து இதை உமிழ்ந்து விட வேண்டும். பின் வாயை தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வது பிளேக்கை அகற்ற உதவுகிறது. இவ்வாறு எண்ணெயைப் பயன்படுத்தி வாயை சுத்தம் செய்யும் போது, வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் எண்ணெயில் குவிந்து, உமிழும் போது அகற்றப்படுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், பல் சிதைவிலிருந்து பற்களைப் பாதிக்கும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

Advertisment
Advertisements

பேக்கிங் சோடா:

எளிய பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி, வீட்டிலேயே எளிமையாக பற்களை வெண்மையாக்கலாம். இதற்கு பேக்கிங் சோடா பவுடரை எடுத்து 8 சொட்டு தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது ஒரு சுத்தமான துணி, பருத்தி பந்து (அ) பல் துலக்குதலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றின் மீது பேஸ்ட்டைத் தடவி, பற்கள் முழுவதும் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு சுமார் 1-2 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின், வெதுவெதுப்பான நீரில் வாயை நன்கு கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பயன்படுத்தி வந்தால், பற்களின் கீழே இருக்கக் கூடிய கரைகள், மஞ்சள் திட்டுகள் மறைந்து வெண்மையாக மாறும், பல் ஈறுகள் வலுப்பெறும் என்கிறார் மருத்துவர் ராஜலெட்சுமி.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Home remedies to whiten your teeth General health tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: