யூடியூப்- உலகின் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு தளம். இணையத்தை பற்றி ஓரளவு தெரிந்த அனைவரும் இதை பயன்படுத்துகிறார்கள்.
யூடியில் ஒருவர் எதையும் கற்றுக்கொள்ளலாம், தங்களை மகிழ்விக்கலாம்,
யூடியூப் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், அது இந்தியாவில் பிரபலமானது, 2015க்கு பிறகு தான். ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவருவதற்காக, மூன்று மாத இலவச நெட் சேவையை அறிவித்தது. அதுவரை இணையம் என்பது காஸ்ட்லி ஆக இருந்த அனைவரது வாழ்விலும் அதன்பிறகு, கூகுள், இணையதளம் எல்லாம் சர்வ சாதரணமாக மாறிவிட்டன. அதற்கேற்ப ஆண்ட்ராய்டு போன்களின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கியது.
அப்போது தான் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் யூடியூப் சேனல்கள் பிரபலமடைந்தன.
குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஊரடங்குக்கு பிறகு, வீடுகளுக்குள் முடங்கியிருந்த பலரும் தங்களுக்கென யூடியூப் சேனல்களை ஆரம்பித்து அதில், தங்களின் அன்றாட வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அவர்களை பல லட்சம் மக்கள் பின் தொடர்கின்றனர்.
அப்படி இன்று தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் யூடியூபர் தான் ட்வீன் த்ரோட்லர்ஸ் வாசன்.
வாசன்’ 2000 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று, கோவையில் பிறந்தார். அவரது தந்தை ஒரு போலீஸ் மற்றும் தாய் இல்லத்தரசி.
வாசன் சிறுவனாக இருந்த போது, அவரது தந்தை இறந்துவிட்டார், அதன் பிறகு, அவர் தனது தாய் மற்றும் பாட்டியுடன் வளர்ந்தார். பி.ஏ.ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பை முடித்தார். வாசனுக்கு பிடித்த பைக் அவரது அப்பாவின் பழைய டீசல் ராயல் என்ஃபீல்டுதான். வாசனின் முதல் பைக் காதல் அங்கிருந்து தான் தொடங்கியது.
அப்பாவைப் போல போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது வாசனின் கனவு. ஆனால் அவர் தனது ஆர்வத்தைப் பின்பற்ற அந்த எண்ணத்தை கைவிட்டார்.
TTF வாசன் இப்போது யூடியூபில் வளர்ந்து வரும் ஒரு டிராவல் விலாகர். இந்தியாவைச் சுற்றியுள்ள பல இடங்களுக்கு தனது பைக்கில் சென்று, அதை வீடியோவாக எடுத்து, தனது யூடியூபில் பதிவிடுகிறார். ஒவ்வொரு இடத்திலும் வாசன்’ ஒரு கூடாரம் அமைத்து அந்தப் பகுதியிலேயே தங்கி’ தனது பைக்கில் சுற்றி முழுப் பகுதியையும் பார்வையிடுவார்.
அப்படி சமீபத்தில் தனது பிறந்தநாளை லடாக்கில் சீன எல்லைக்கு அருகில் உள்ள பான்பாங் ஏரியில் வாசன் கொண்டாடினார்.
2020 இல் வாசன் புதிய யூடியூப் சேனலைத் தொடங்கினார், இப்போது அவருக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இப்படி தனது டிராவல் விலாக்ஸ் மூலம் வாசன், குறுகிய காலத்தில் யூடியூபில் அதிக ரசிகர்களை சம்பாதித்தார்.
வாசன், தனது முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானம் செய்ததை வீடியோ எடுத்து, தனது யூடியூபில் பகிர்ந்தார். அப்போது தனது ரசிகர்களுடன் சென்னையில் டெக்கத்லானில் ஒரு மீட்-அப் நடத்தப்போவதாகவும் கூறியிருந்தார்.
அதைக் கேட்டு அம்பத்தூரில் இருக்கிற டெக்கத்லானில் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே குவிந்துவிட்டது. கூட்டத்தை பார்த்த போலீஸ் என்னவென்று தெரியாமல் அங்கே சென்று விசாரிக்க, வாசன் ஃபேன்ஸ் மீட்-அப் என்று சொன்னதும், அவர்களை சாலையில் நிற்க வேண்டாம்; தயவு செய்து உள்ளே செல்லுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.
வாசன் வெறும் 100 பேர் வருவாங்க என்று நினைத்து, இந்த மீட்-அப் அரேஞ்ச் செய்ய, அங்கே ஆயிரகணக்கில் இளைஞர் பட்டாளம் குவிந்தது. சிறிது நேரத்துக்குள் அங்கிருந்த இளைஞர் கூட்டத்துக்குள் வாசன் பைக்கில் வர, அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு டிடிஎஃப் டிடிஎஃப் என்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த கூட்டத்தை பார்த்த போலீஸ், சாலையில் டிராஃபிக் ஆகுது; தயவு செய்து புரிஞ்சுக்கோங்க என்று அவர்களிடம் கூற, வாசனும் அதை புரிந்து கொண்டு, ரசிகர்களாம் தப்பா எடுத்துக்காதீங்க, மீட்-அப்-ல உங்கக்கிட்ட பேச முடியலனு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்ப, அந்த இளைஞர் பட்டாளமும் அவர் பின்னாலே தொடர்ந்து சென்றது.
இப்படி ஹீரோக்களுக்கு இணையாக, யூடியூபர் ஒருவருக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்த அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“