Whole Wheat Bread and Weight Loss : தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் காலை உணவில் அதிகம் இருப்பது பிரெட். அதிலும், ஆரோக்கியம் என்கிற பெயரில் பலர் ஹோல்வீட் அல்லது வீட் பிரெட் வகைகளைத் தேர்வு செய்கின்றனர். உண்மையில் ஹோல்வீட் பிரெட் ஆரோக்கியமானதா, உடல் எடை குறைக்க பிரெட் உதவுமா என்பதை ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜிடம் கேட்டோம்.
"'ஹோல்வீட்' பொருள்கள் முழுமையான ஆரோக்கியத்தை உடலுக்குத் தரும் என்று சொல்லிவிட முடியாது. அதிலும் 20% பதப்படுத்தப்பட்ட பொருள்கள், சிந்தடிக் உப்பு மற்றும் சர்க்கரை உள்ளன. எனவே, எந்த வகையான பிரெட்டாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கன்டென்ட் அளவுகளைச் சரிபார்ப்பது அவசியம்.
முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால் தயாரிக்கப்படுவதுதான் வெள்ளை பிரெட். அதுபோன்று தானியங்களைச் சுத்திகரிக்கும்போது, அதிலிருக்கும் நார் மற்றும் இதரச் சத்துகள் வெளியேற்றப்படும். வெள்ளை பிரெட்டின் சுவை மற்றும் இயற்கை சத்துகள் வேண்டும் என நினைப்பவர்களுக்குச் சரியான சாய்ஸ் வெள்ளை ஹோல்வீட் பிரெட்.
என்றாலும், அதன் தரத்தை சரிபார்க்கத் தவறவிடாதீர்கள். நூறு சதவிகிதம் ஹோல் கிரைன் அல்லது ஹோல் வீட் என்பது முதன்மைப் பொருளாக இருந்தால் மட்டுமே அந்த பிரெட் வகையைத் தேர்வு செய்யலாம். ப்ரின்ட் செய்யப்பட்டிருக்கும் கன்டென்ட்டில், `ஹோல்' என்ற வார்த்தை இல்லாமல், வெறும் 'வெள்ளை வீட்' என்றிருந்தால், அதில் நிச்சயம் அதிகப்படியான செயற்கைத்தன்மை இருக்கும். எனவே அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.
வெள்ளை பிரெட்டை உங்கள் உணவு வகைகளிருந்து நீக்கினால், உடல் எடை குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், இந்த பிரெட் வகை இயல்பாகவே கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை உட்கொள்ளும் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் உடல் எடை அதிகரிக்கவேச் செய்யும். எந்த வகையாக இருந்தாலும் அவற்றை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது"
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"